×

கி.வீரமணி கூட்டத்தில் தாக்குதல் அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம்

சென்னை: கி.வீரமணி கூட்டத்தில் தாக்குதல் நடத்தப்பட்டதற்கு கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். மதிமுக பொதுச்செயலாளர் வைகோ: மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் திருநாவுக்கரசரை ஆதரித்து திருச்சியில் நடந்த தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் பங்கேற்கச் சென்ற திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி வாகனம் மீது இந்து முன்னணி வன்முறைக் கும்பல் தாக்குதல் நடத்தி இருக்கிறது. வீரமணி சனாதன மதவெறி பாசிசத்தை இனியும் அனுமதித்தால் நாடு தாங்காது என்று கருத்துரை வழங்கி வருகிறார். இதை தாங்கிக்கொள்ள முடியாமல், வன்முறையைத் தூண்டி விடும் முயற்சியில் சிலர் இறங்கி உள்ளனர். வீரமணி மீது தாக்குதல் நடத்த முனைந்தது வன்மையான கண்டனத்துக்கு உரியது. முத்தரசன் (இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர்): பத்திரிகையில் கி.வீரமணியை தாக்க வேண்டும் என, கேள்வி பதில் பாணியில் செய்தி வந்தபோதே, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அவரது உயிருக்கு ஆபத்து உள்ளது எனவும், தமிழக அரசு தகுந்த நடவடிக்கை எடுத்து பாதுகாப்பு வழங்க வேண்டும் எனவும், கோரியிருந்தது. தற்போது இந்து முன்னணியினர் பொதுக்கூட்ட மேடைக்கே சென்று தாக்கியுள்ளனர். இந்துத்துவ அமைப்புகள் கொலை நோக்கோடு தொடர்ந்து தாக்குதல் நடத்துவதை இனிமேலும் மதச்சார்பற்ற முற்போக்கு சக்திகள் அனுமதிக்காது. தமிழக அரசு உடனடியாக அவருக்கு தகுந்த பாதுகாப்பை வழங்க வேண்டும்.

திருமாவளவன் (விசிக தலைவர்):  சனாதனவாதிகளை ஆட்சியமைக்க மீண்டும்   அனுமதித்தால் இந்தியா ஒரு ஜனநாயக நாடாக  இருக்காது  என்று  தேர்தல் பிரச்சாரத்தில்  கி.வீரமணி  பேசி வருகிறார். அதை தாங்கிக்கொள்ள முடியாமல் வன்முறையைத் தூண்டி விடும் முயற்சியில் மதவெறி  சக்திகள்  இறங்கி உள்ளன. இதை வன்மையாகக் கண்டிக்கிறோம். கி.வீரமணிக்கு  தமிழக அரசு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும். இத்தகைய வன்முறையில்  ஈடுபட்டோரைக் கைது செய்ய வேண்டும். கே.பாலகிருஷ்ணன் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர்): இந்துத்துவா அமைப்பினர் வன்முறையில் ஈடுபடுவதை தமிழக அரசு மற்றும் தேர்தல் ஆணையம் கட்டுப்படுத்த தவறியுள்ளது. எனவே, வன்முறையாளர்கள் அனைவரும் கைது செய்யப்பட வேண்டும். கி.வீரமணிக்கு போலீஸ் பாதுகாப்பு அளித்திட வேண்டும்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : K.Veramani ,meeting ,leaders ,party , K.Veramani meeting,political party leaders
× RELATED காவிரி நீர் ஒழுங்காற்று குழுவின் 95-வது...