×

தேர்தல் விதிமுறையை மீறி தொடங்கப்பட்ட ‘நமோ டிவி’ செய்தி சேனலே கிடையாது : புதிய தகவலால் பரபரப்பு

புதுடெல்லி: ‘தேர்தல் நடத்தை விதிமுறையை மீறி தொடங்கப்பட்டதாக குற்றம்சாட்டப்படும் ‘நமோ டிவி’ செய்தி சேனல் அல்ல’ என டாடா ஸ்கை டிடிஎச் தெரிவித்துள்ளது. பிரதமர் மோடி கடந்த மாதம் 31ம் தேதி, ‘நமோ டிவி’ என்ற செய்தி சேனனை  தொடங்கி வைத்தார். பிரதமர் மோடியின் படத்தை சின்னமாக கொண்ட இந்த டிவி, பாஜ தலைவர்களின் பேட்டி, அவர்களின் தேர்தல் பிரசாரம், பிரதமர் மோடியின் தேர்தல் உரை ஆகியவற்றை ஒளிபரப்பி வருகிறது. முக்கிய எதிர்க்கட்சிகளான காங்கிரசும், ஆம் ஆத்மி கட்சியும், ‘நமோ டிவி தொடங்கப்பட்டது தேர்தல் நடத்தை விதிமீறல்’ என குற்றம்சாட்டி வருகின்றன.

இந்த நிலையில், டிடிஎச் சேவையை வழங்கும் டாடா ஸ்கை நிறுவனம் தனது டிவிட்டர் பதிவில் நேற்று வெளியிட்ட பதிவில், ‘நமோ டிவி என்பது இந்தி செய்தி சேனல் அல்ல. அது பாஜ கட்சி மூலம் வழங்கப்படும் ஒரு சிறப்பு சேவை. இதற்கான செய்திகள் அனைத்தையும் பாஜ.தான் வழங்குகிறது. ’ என கூறப்பட்டுள்ளது. இதையடுத்து, மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சகம் அளித்துள்ள தகவலில், `நமோ டிவி ஒரு விளம்பர சேனல். இதை தொடங்க முன் அனுமதி தேவையில்லை. சில டிடிஎச் சேனல்களில் பாஜ பணம் கொடுத்து இந்த சேவையை வழங்குகிறது’ என குறிப்பிட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : news channel ,Fresh News , Namo TV, news channel , violation, election code does not exist
× RELATED கத்தார் செய்தி சேனலுக்கு தடை: இஸ்ரேல் பிரதமர் அறிவிப்பு