அமமுக வேட்பாளர்கள் அனைவரையும் சுயேச்சைகளாகவே கருத அதிமுக மனு

சென்னை : அமமுக வேட்பாளர்கள் அனைவரையும் சுயேச்சைகளாகவே கருத வேண்டும் என்ற கோரிக்கை மனுவை தேர்தல் ஆணையத்திடம் அதிமுக அளித்துள்ளது. அமமுக துணை பொதுச் செயலாளர் டிடிவி தினகரனை அக்கட்சியின் நட்சத்திர பேச்சாளராக கருதக்கூடாது என்றும் அமமுக பதிவு பெறாத தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்படாத கட்சி ஆகும் என்றும் மனுவில் கூறப்பட்டுள்ளது. அமமுக வேட்பாளர்களை ஆதரித்து டிடிவி தினகரன் பிரச்சாரம் செய்து வருகிறார்.டிடிவி தினகரனின் பிரச்சார செலவை வேட்பாளர் கணக்கில் சேர்க்க வேண்டும் என்றும் அதிமுக கோரிக்கை விடுத்தது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : AIADMK ,nominees , AMMk, Candidates, AIADMK, Election Commission, Dinakaran
× RELATED அமைச்சர் பதில் சசிகலாவுக்கு மீண்டும் அதிமுகவில் இடமா?