×

உலகிலேயே வரி அதிகம் உள்ள நாடு இந்தியாதான்: டிரம்ப் புலம்பல்

வாஷிங்டன்: உலகிலேயே இந்தியாவில்தான் வரி அதிகமாக உள்ளது. இந்திய பொருட்களுக்கு நாம் வரி விதிக்காவிட்டாலும், ஹார்லி டேவிட்சனுக்கு வரி விதித்து வருகிறது என புலம்பியுள்ளார் அமெரிக்க அதிபர் டிரம்ப். அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் ஹார்லி டேவிட்சன் பைக்குகளுக்கு இந்தியா 100 சதவீத வரி விதிக்கிறது என அமெரிக்க அதிபர் டிரம்ப் நீண்ட காலமாகவே குற்றம் சாட்டி வருகிறார். இருப்பினும், பின்னர் ஹார்லி டேவிட்சன் பைக்குகளுக்கான வரியை இந்தியா 50 சதவீதமாக குறைத்ததற்கு திருப்தி தெரிவித்தார். இந்த நிலையில், இந்தியா அதிக வரி விதிப்பதாக அவர் மீண்டும் குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து டிரம்ப் பேசியதாவது: உலகிலேயே இந்தியாவில்தான் மிக அதிக வரி விதிக்கப்படுகிறது.

நமது பொருட்களுக்கு அவர்கள் 100 சதவீதம் வரி விதிக்கின்றனர். இந்தியாவில் இருந்து நம் நாட்டுக்கு மோட்டார் சைக்கிள்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. மிக அதிகமாக ஏற்றுமதி செய்கின்றனர். ஆனாலும் அவற்றுக்கு நாம் வரி விதிப்பதே இல்லை. ஆனால், நம் நாட்டு தயாரிப்பான ஹார்லி டேவிட்சன் பைக்குகளுக்கு நூறு சதவீத வரி விதிக்கின்றனர். இது எந்த விதத்தில் நியாயம்? சீனா - அமெரிக்கா இடையே வர்த்தகம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் சுமூகமாக நடந்து வருகின்றன. சீனாவின் முறையற்ற வர்த்தக நடைமுறைகளையும், அறிவுசார் சொத்துரிமை திருட்டுக்கு எதிராகவும் நாம் குரல் கொடுத்துள்ளோம். நமக்கு அவர்கள் செய்ததற்கு பதிலடியும் கொடுத்துள்ளோம். பல ஆண்டுகளாக இதை எப்படி அனுமதித்தார்கள் என்று தெரியவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

‘சீன அதிபரை அரசரே என்றுதான் அழைப்பேன்’டிரம்ப் மேலும் கூறுகையில், ‘‘சீன அதிபர் ஜி ஜின்பிங் அரசரை போல இருக்கிறார். அவர் மிகவும் வலிமையான மனிதர். அதனால், அவரை நான் ‘அரசரே...’ என்றுதான் அழைப்பேன். ஆனால், நான் அரசன் அல்ல; அதிபர்தான். அவரும் நான் அவ்வாறு அழைப்பதை ரசித்துள்ளார்’’ என்றார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : India ,world , In the world, taxes, much, India, trump, lamentation
× RELATED இணையவழிக் குற்றங்கள் அதிகம்...