×

நானே எங்கும் ராஜா: கூகுள் விளம்பரத்திலும் பாஜ முதலிடம்

முன்பெல்லாம் தேர்தல் வந்தால், ஊரில் ஒரு சுவர் கூட மிச்சமிருக்காது. கட்சி சின்னங்கள் வரைந்து, புதுப்புது வண்ணங்களில் மிளிரும். இது மட்டுமின்றி, எங்கு பார்த்தாலும் விளம்பர போஸ்டர்களும், விளம்பர பேனர்கள் என  களை கட்டும். இவை எல்லம் இப்போது சுத்தமாக கிடையாது. இதற்கு மாறாக ஊடகங்கள், பத்திரிக்கைகளில் பெரியளவில் விளம்பரங்கள் செய்யப்படுகிறது. இப்போது, இதுவும் டிஜிட்டல் மயத்துக்கு சென்று விட்டது.
சமீப காலமாக, மக்களிடையே சமூக வலைதளங்களான வாட்ஸ் அப், டிவிட்டர், பேஸ்புக் பயன்பாடு அதிகரித்துள்ளது. எனவே, அரசியல் கட்சிகளும் காலத்திற்கு ஏற்றார்போல் தங்கள் விளம்பர யுக்தியை மாற்றியுள்ளன. இணைய தளத்தில் விளம்பரங்கள் செய்வதில் ஆர்வம் காட்டி வருகின்றன.
பிரபல இணைய தளமான கூகுளில் பாஜ, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் மக்களவை தேர்தலை முன்னிட்டு விளம்பரம் செய்து வருகின்றன.

கடந்த பிப்ரவரி 19ம் தேதி தொடங்கி இப்போது வரை, கூகுளில் விளம்பரம் செய்வதற்காக கட்சிகள் ரூ.3.76 கோடியை செலவு செய்துள்ளன. இதில், அதிகம் விளம்பரம் செய்த கட்சிகளின் பட்டியலில் பாஜ முதலிடம் பிடித்துள்ளது. இக்கட்சி இதுவரை ரூ.1.21 கோடிக்கு விளம்பரம் செய்துள்ளது. கூகுளில் கட்சிகள் செய்துள்ள மொத்த விளம்பரத்தில் இது 32 சதவீதமாகும். காங்கிரசுக்கு 6 இடமே கிடைத்துள்ளது. இக்கட்சி இதுவரை ரூ.54,100க்கு மட்டுமே விளம்பரம் செய்துள்ளது. ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்எஸ்ஆர் காங்கிரஸ், ரூ.1.04 கோடிக்கு விளம்பரம் செய்து 2வது இடம் பிடித்துள்ளது. ரூ.85.25 லட்சத்துடன் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி 3வது இடத்தில் உள்ளது. விளம்பர விதிமுறைகளை மீறியதாக 11 கட்சிகள் விளம்பரம் செய்வதற்கு கூகுள் தடை விதித்துள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : king , I am anywhere in the king, Google, Advertising, Bhaj, Topping
× RELATED சவுதி மன்னர் சல்மான் மருத்துவமனையில் அட்மிட்