×

அகிலேஷூக்கு பாஜ வைத்த ‘ஸ்டார்’ செக்

உ.பி. மாநிலம் அசம்கர் தொகுதியில் போட்டியிடுகிறார் சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ். இவருக்கு எதிராக போட்டியிடும் பாஜ வேட்பாளர் இப்போது அறிவிக்கப்பட்டுள்ளார். போஜ்புரி படங்களில் நடிக்கும் முன்னணி நடிகரும் பாடகருமான தினேஷ் லால் யாதவ் என்ற நிராஹுவா தான் அகிலேஷுக்கு எதிராக பாஜ சார்பில் நிற்கிறார். 2016ம் ஆண்டு உ.பி.யின் உயரிய விருதான ‘யாஷ் பாரதி’ விருதை அப்போதைய முதல்வர் அகிலேஷ் யாதவின் கையில் இருந்து வாங்கியவர்தான் தினேஷ். ‘அகிலேஷ் ஜி பெரிய தலைவர் தான். அவரை எதிர்த்து நிற்பது தனி த்ரில். அவருக்கு கடும் போட்டியை உருவாக்குவேன்’ என்று தினேஷ் லால் யாதவ் கூறினார்.

வேட்பாளரை அறிமுகப்படுத்தி உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் பேசும்போது, ‘யாதவ் ஆக இருப்பதாலேயே எல்லோரும் அகிலேஷின் பக்தர்களாக இருப்பார்கள் என்று அர்த்தமில்லை. பலர் தேச பக்தர்கள். அதுபோன்ற தேசபக்தர்தான் யாதவ் தினேஷ் லால்’ என்றார்.  ரேபரேலி தொகுதியில் நிற்கும் சோனியாவுக்கு எதிராக பாஜ சார்பில் தினேஷ் பிரதாப் சிங் நிறுத்தப்பட்டிருக்கிறார். இவர் காங்கிரஸின் முன்னாள் எம்எல்சி. 2018 ஏப்ரலில் இவர் காங்கிரசிலிருந்து விலகி அமித்ஷா முன்னிலையில் பாஜவில் சேர்ந்தார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Akhilesh , Akhilesh, Baju, Czech
× RELATED உ.பியில் மாற்றத்திற்கான அலை வீசுகிறது: அகிலேஷ் நம்பிக்கை