×

கள்ள ஓட்டு போடுங்கப்பா... சமாஜ்வாடி வேட்பாளர் அறிவுரை: ம.பி. 29 தொகுதிகள்.

மத்தியப் பிரதேசத்தில் சமாஜ்வாடி வேட்பாளர் ஒருவர் கள்ள ஓட்டு போடுங்கள் என தனது கட்சி தொண்டர்களுக்கு அறிவுரை வழங்கிய வீடியோ வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மத்தியப் பிரதேசத்தில் 4 கட்டங்களாக ஏப்ரல் 29 முதல் மே 19 வரை மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது. காங்கிரஸ், பாஜ என பிரதானக் கட்சிகளின் பிரசாரம் தீவிரமடைந்துள்ளது. உ.பி.யை தவிர இம்மாநிலத்திலும் சமாஜ்வாடி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சி கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. மத்தியப் பிரதேசத்தின் சதர்பூர் மக்களவை தொகுதியில் சமாஜ்வாடி கட்சியின் வேட்பாளராக ஆர்.ஆர்.பன்சால் அறிவிக்கப்பட்டுள்ளார். சமீபத்தில் சமாஜ்வாடி கட்சி நிர்வாகிகள் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் வேட்பாளர் பன்சால் பேசியதை தொண்டர் ஒருவர் வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ வைரலாகி மாநிலம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
அந்த வீடியோவில் பன்சால்  தனது கட்சி தொண்டர்களிடம் பேசியதாவது:

இந்த தொகுதி வாக்காளர் பட்டியலை சேகரித்து வைத்து கொள்ளுங்கள். தேர்தலின்போது வாக்களிக்க வரமாட்டார்கள் என்று தெரிந்தால் அவர்களின் ஓட்டை எந்த வாக்குச்சாவடி என்று பார்த்து நமது கட்சி தொண்டர்களை அனுப்பி கள்ள ஓட்டு போட்டுவிடுங்கள். அப்படி செய்தால்தான் நமது கட்சி வெற்றி பெற முடியும். ஏற்கனவே கிராமப் பகுதிகளில் இருந்த நமது ஓட்டு சதவீதம் வெகுவாக குறைந்துள்ளது. இதனால், ஓட்டு போடாதவர்கள் ஓட்டை நாம் போட்டால்தான் வெற்றி பெற முடியும் இல்லையென்றால் வெற்றி பெறுவது கடினம். இவ்வாறு அந்த வீடியோவில் பேசியுள்ளார்.
மத்தியப் பிரதேசத்தில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த வீடியோ வைத்து சமாஜ்வாடி வேட்பாளர் பன்சால் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாஜ, காங்கிரஸ் உட்பட அனைத்து கட்சியினரும் கோரிக்கை வைத்துள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Samajwadi Party ,nominee , Kalla Vadu, Putugangpa ... Samajwadi candidate Advice: MP 29 blocks.
× RELATED ஹெலிகாப்டர் திடீர் கோளாறு : நடுவானில் பாஜ எம்பி தவிப்பு