×

முதுகில் குத்துவோரை நம்ப மாட்டேன்: முதல்வர் குமாரசாமி

நிகில் குமாரசாமிக்கு எதிராகவும், சுயேட்சை வேட்பாளர் சுமலதா அம்பரீசுக்கு ஆதரவாகவும் காங்கிரஸ் கட்சியின் கொடியை பிடிப்பது குறித்து முதல்வர் குமாரசாமி கூறுகையில், ‘‘காங்கிரஸ் காட்சியின் மூத்த தலைவர்கள் மஜதவுக்கு ஆதரவாக உள்ளனர். ஆனால், வெளியிலிருந்து வந்து காங்கிரஸ் கட்சியில் இணைந்தவர்கள் தான் நம்பவைத்து முதுகில் குத்துகின்றனர். இதுபோன்று செயல்படுவோரை அணுகி ஆதரவு கேட்க வேண்டிய அவசியம் எனக்கில்லை.

நிகில் குமாரசாமிக்கு மூத்த காங்கிரசாரின் ஆதரவு உள்ளது. அதை வைத்தே நிகில் குமாரசாமியை இந்த தேர்தலில் வெற்றிபெறச் செய்வேன்’’ என்றார். மேலும், காங்கிரஸ் தொண்டர்கள் மற்றும் இரண்டாம் நிலை தலைவர்களின் நடவடிக்ைகயால் மஜத-காங்கிரஸ் இடையே கூட்டணி உள்ளதா எனவும், காங்கிரசாரின் ஆதரவு மஜத வேட்பாளருக்கு உள்ளதா என்ற சந்தேகமும் முதல்வர் குமாரசாமிக்கு அதிகரித்துள்ளதால் கூட்டணி விவகாரத்தில் காங்கிரசார் மீது அவர் நம்பிக்கை இழந்துள்ளதாக கூறப்படுகிறது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Chief Minister ,Coomaraswamy , CM Kumaraswamy
× RELATED புத்தகங்கள் மனிதச் சமுதாயத்தைத்...