×

விஸ்வநாத்-சுமலதா திடீர் சந்திப்பு

பெங்களூரு: பத்திரிகையாளர்களை சந்திக்க சுமலதா வந்தபோது அவருக்கு பத்திரிகையாளர் சங்கம் சார்பில் பூங்கொத்து கொடுத்த வரவேற்பு அளிக்கப்பட்டது. இதேபோல மாநில மஜத தலைவர் விஸ்வநாத்தும் பத்திரிகையாளர்களை சந்திக்க வந்தார். அவரையும் சங்க நிர்வாகிகள் வரவேற்றனர். அப்போது சுமலதாவும், விஸ்வநாத்தும் சந்தித்துக் கொண்டனர். புன்முறுவலுடன் இருவரும் காணப்பட்டனர். இந்த அரிய காட்சியை பத்திரிகை புகைப்பட நிபுணர்களும், ஊடக வீடியோகிராபர்களும் போட்டி போட்டுக்கொண்டு தங்கள் கேமராவில் சிறை பிடித்தனர். தேர்தல் ஆணையத்தில் சுமலதா புகார்: இதையடுத்து பெங்களூரு தலைமை தேர்தல் ஆணையத்திற்கு சென்ற சுயேட்சை வேட்பாளர் சுமலதா, தலைமை தேர்தல் அதிகாரியை சந்தித்து தேர்தல் கண்காணிப்பாளர்கள் மீது புகார் அளித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது: தேர்தல் பிரசாரத்தை இரவு 10 மணிக்குள் முடிக்கவேண்டுமென்று உள்ளது. ஆனால் மக்கள் நள்ளிரவு ஆனாலும் எனது வருகைக்காக காத்திருக்கின்றனர். அவர்களை ஏமாற்ற முடியாது. மேலும் அவர்களிடம் சென்று தேர்தல் ஆணையம் இரவு 10 மணி வரைதான் நேரம் கொடுத்துள்ளது என்று கூற முடியாது. இருப்பினும் நான் தேர்தல் விதிமுறைகளை கடைபிடித்து வருகிறேன். ஆனால் தேர்தல் அதிகாரிகள் சிலர் இரவு 9.30 மணிக்கே வந்து, பிரசார நேரம் முடித்து விட்டது. இதற்கு மேல் பிரசாரம் செய்தால் நடவடிக்கை எடுப்பேன் என்று மிரட்டுகின்றனர். இது குறித்து தேர்தல் ஆணையத்தில் வீடியோவுடன் புகார் அளித்துள்ளேன். அதை ஏற்ற தேர்தல் அதிகாரிகள் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக வாக்குறுதி அளித்துள்ளனர்.இவ்வாறு அவர் கூறினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : meeting ,Vishwanath-Sumalatha , Vishwanath, Sumalatha, meeting
× RELATED வாக்காளர்களுக்கு பணம் தருவதை...