பெங்களூரு பி.எப். அலுவலகங்களில் வருங்கால வைப்பு நிதி குறை தீர்ப்பு கூட்டம்: வரும் 10ம் தேதி நடக்கிறது

பெங்களூரு: தொழிலாளர் வைப்பு நிதி பெங்களூரு மண்டல துணை ஆணையர் ராமகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கை: வருங்கால வைப்பு நிதி செலுத்தும் நிறுவனங்கள் மற்றும் தொழிலாளர்களின் வருங்கால வைப்பு நிதி குறித்த சந்தேகங்களை தீர்த்துவைக்கும் வகையில் மாதந்தோறும் ‘‘வைப்பு நிதி உங்கள் அருகில்’’ என்ற தலைப்பில் குறை கேட்பு கூட்டம் நடத்தப்படுகிறது. பெங்களூரு மண்டலத்திற்கு உட்பட்ட ராஜராஜேஸ்வரி நகர், யலகங்கா ஆகிய பி.எப். அலுவலகங்களில் இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெறும். எண் 13, ராஜாராம் மோன்ராய் சாலை, பெங்களூரு-560 025 பி.எப். மண்டல ஆணையர் அலுவலகம், ராஜராஜேஸ்வரி நகர், எண் 570, ராஜ ராஜேஷ்வரி ரெசிடென்சி, ஐடியல் கோ-ஆபரேட்டிவ் ஹவுசிங் காலனி, பி.எப். துணை மண்டல அலுவலகம். யலகங்கா பி.எப். துணை மண்டல அலுவலகம், எண் 2 மாருதி காம்ப்ளக்ஸ், 1வது ஏ.மெயின் (எஸ்.பி.ஐ வங்கி அருகில்), யலங்கா நியூ டவுன், பெங்களூரு-560 064 ஆகிய அலுவலகங்களில் வரும் 10.04.2019 அன்று புதன்கிழமை குறைேகட்பு நிகழ்ச்சி நடக்க உள்ளது.

இக்கூட்டத்தில் கலந்துகொண்டு வருங்கால வைப்பு நிதி, மாதாந்திர உதவித் தொகை பெறுவது போன்ற சந்தேகங்களை கேட்க விரும்புவோர் 08.04.2019க்குள்  தங்களின் பெயரை  மண்டல பி.எப். ஆணையர்-1 மற்றும் பி.எப். அலுவலக பொறுப்பாளர் துணை மண்டல ஆணையர் அலுவலகம், யலகங்கா மற்றும் ராஜேஸ்வரி நகர் ஆகிய அலுவலகங்களுக்கு அனுப்ப வேண்டும். 10ம் தேதி அன்று மேற்கண்ட அலுவலகங்களில் காலை 10.30 மணி முதல் பகல் 1.00 மணி வரை பி.எப். நிதி செலுத்துவோருக்கும், பகல் 3.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை தொழிலாளர்களுக்கும், சம்மந்தப்பட்ட நிறுவனங்களில் சட்ட ரீதியான பிரச்னைகள் குறித்த சந்தேகங்கள் மாலை 4.00 மணி முதல் 5.00 வரை தீர்த்து வைக்கப்படும்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: