×

டிரம்சை ரசித்து விட்டு பணம் தராமல் ஓடிய வேட்பாளர்

ஈரோடு மக்களவை தொகுதி அதிமுக வேட்பாளர் வெங்கு மணிமாறனை ஆதரித்து நடிகர் சரவணக்குமார், நகைச்சுவை நடிகர் சுப்புராஜ் ஆகியோர் பிரசாரம் மேற்கொண்டனர். அப்போது, ஈரோடு காளைமாட்டு சிலை அருகே ஆதரவு கேட்க வந்த நடிகர்களை பேச விடாமல் ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ., தென்னரசு சுமார் 30 நிமிடத்திற்கு மேலாக பழைய புராண கதைகளையே பேசினார். இதைக்கேட்டு நடிகர் சரவணக்குமார் கோபத்தின் உச்சிக்கு போய், எம்எல்ஏவை 2 நிமிடம் முறைத்து பார்த்தார். அதன்பின் புரிந்து கொண்ட எம்எல்ஏ தென்னரசு மைக்கை நடிகர் சுப்புராஜிடம் கொடுத்தார். அவர் மைக்கை பிடித்ததும் திருப்பூர் தொகுதி வேட்பாளருக்கு வாக்கு சேகரிக்க ஆரம்பித்து விட்டார்.

முன்னதாக, பிரசார வாகனம் வரும்போது அங்கு மாரியம்மன் கோவில் திருவிழாவிற்காக டிரம்ஸ் செட் குழுவினர் டிரம்ஸ் அடித்து கொண்டிருந்தனர். இதைப்பார்த்த எம்எல்ஏ தென்னரசு, டிரம்ஸ் குழுவினரை அழைத்து நடிகர்கள் வரும் போது சிறிது நேரம் டிரம்ஸ் அடியுங்கள் என கேட்டார். பிரசார வாகனத்திற்கு வந்த டிரம்ஸ் குழுவினர் உற்சாகமாக டிரம்ஸ் அடித்தனர்.  பிரசாரம் முடிந்ததும் நடிகர்கள் புறப்பட்டு சென்றனர். அவர்கள் சென்ற சில நிமிடத்திலேயே எம்எல்ஏவும், கட்சியினரும் டிரம்ஸ் செட் குழுவினருக்கு பணம் தராமல் டாடா காட்டி விட்டு காரில் ஏறி தப்பி சென்றனர். இதனால் டிரம்ஸ் குழுவினர் மிகுந்த ஏமாற்றம் அடைந்தனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : candidate , candidate, admk,
× RELATED வடசென்னை தொகுதிக்கு உட்பட்ட...