அரசு வாகனங்களிலேயே அதிகாரிகள் துணையோடு ஆளும்கட்சியினர் பணப்பட்டுவாடா: தவாக வேல்முருகன் பரபரப்பு குற்றச்சாட்டு

சேலம்: தமிழக வாழ்வுரிமை கட்சி நிறுவனர் வேல்முருகன் சேலத்தில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: மத்திய பாஜ அரசு, வருமானவரித்துறை, அமலாக்கத்துறையை கையில் வைத்துக்கொண்டு சட்டத்தை மீறி  நடக்கிறது. தமிழகத்தில் திமுக உள்பட கூட்டணி கட்சியினர் வீடுகளில் சோதனையிட்டு வருகின்றனர். இது மாபெரும் ஜனநாயக படுகொலையாகும். அதிமுகவினரே, திமுக கூட்டணி நிர்வாகிகளுக்கு சொந்தமான இடங்களில்  பணத்தை பதுக்கி வைத்துவிட்டு, சோதனை என்ற பெயரில் அவப்பெயர் ஏற்படுத்தி வருகின்றனர்.  பாஜக, அதிமுக, பாமக, தேமுதிக உள்ளிட்ட கூட்டணி கட்சி வேட்பாளர்களின் வீடுகளில் இதுவரை சோதனையிடப்படவில்லை. இது எந்தவிதத்தில் நியாயம். முதல்வர் உறவினர், சம்பந்தி, நண்பர்கள் வீடுகளில்  சோதனையிடுவதற்கு தேர்தல் ஆணையம் தயாரா? போலீசார் மற்றும் தேர்தல் ஆணையம் உதவியோடு அரசு அதிகாரிகள் வாகனங்களில் ஆளும் கட்சியினர் பணம் பட்டுவாடா செய்கின்றனர். இவர்களிடம் ஒரு ரூபாய் பிடித்ததாக  இதுநாள் வரை காட்சிப்படுத்தவில்லை. தேர்தல் ஆணையம் ஒருதலைப்பட்சமாக செயல்பட்டு வருகிறது.

 ராமதாஸ் வன்னியர் அறக்கட்டளை சொத்துக்களை அபகரித்துள்ளார். மக்களவை தேர்தலில் 7 சீட்டில் 4 சீட்டு விலை பேசியுள்ளனர். 1980ல் இருந்து வன்னிய மக்களுக்கு என்னென்ன செய்தீர்கள் என்று நான் விவாதிக்க தயாராக  இருக்கிறேன். என்னுடன் விவாதிக்க ராமதாஸ் தயாரா? திமுக கூட்டணி கட்சி நிர்வாகிகள் எங்கு செல்கிறார்கள், அவர்களின் வாகனங்கள் எங்கு செல்கிறது எங்கு பொதுக்கூட்டம் நடக்கிறது என்று டெல்லியில் இருந்தபடியே அதிகாரிகளின் துணையோடு செயற்கைகோள் மூலம் படம்  பிடித்து கண்காணிப்பு பணியில் மோடி தலைமையிலான அரசு ஈடுபட்டு வருகிறது. அதனை தகர்த்தெறிந்து திமுக கூட்டணி பெற்று பெறும்.
இவ்வாறு வேல்முருகன் கூறினார்.

என்னை செயலிழக்க வைக்க சதி
‘‘நான் சிறையில் இருந்தபோது எனக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டது. அப்போது ஊசி, டிரிப் ஏற்றப்பட்டது. இந்த சிகிச்சையால் என்னால் சரியாக பேச முடியவில்லை. சிறையில் இருந்து மேல்சிகிச்சைக்காக ஸ்டான்லி  மருத்துவமனையில் சேர்க்கப்பட்டேன். அங்கு கை, கால் செயலிழக்கும் வகையில் சதிவலை பின்னப்பட்டுள்ளது. எனது மருத்துவ சிகிச்சையில் மர்மம் நீடிக்கிறது. சிகிச்சை அளிக்கப்பட்ட கோப்புகளை மருத்துவமனை  நிர்வாகத்திடம் கேட்டுள்ளேன். அதில் தவறு இருந்தால் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வேன்,’’ என்றும் வேல்முருகன் தெரிவித்தார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Government Officers , government vehicles,officers , paid, Dave ,accusation
× RELATED சொல்லிட்டாங்க...