×

வேனில் கொண்டு வந்த 4.5 கோடி தங்கம், வைர நகைகள் சிக்கியது: தாம்பரத்தில் பறக்கும் படையினர் அதிரடி சோதனை

சென்னை : தாம்பரத்தில் தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய வாகன சோதனையில் வேனில் கொண்டு வந்த  நாலரை கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கம் வைர நகைகள் சிக்கியது. தாம்பரம் ஜிஎஸ்டி சாலையில் தேர்தல் பறக்கும் படையினர் தாசில்தார் ரவிச்சந்திரன் தலைமையில் வாகன சோதனை நடத்தினர்.அப்போது வேன் ஒன்றை மடக்கி சோதனை செய்தபோது அதில் சுமார் நாலரை கோடி மதிப்புள்ள தங்கம் மற்றும் வைர நகைகள் வெள்ளி பொருட்கள் 20 பெட்டிகளில் இருந்தது தெரியவந்தது.

உடனே அந்த வேனை தாம்பரம் கோட்டாச்சியர் அலுவலகத்திற்கு கொண்டு சென்று நகை பெட்டிகளை பறிமுதல் செய்து விசாரித்தனர்.  விசாரணையில், சென்னை அண்ணாநகரில் உள்ள  பிரபல நகைகடையில் இருந்து  விற்பனைக்காக தி.நகர், நங்கநல்லூர், வேளச்சேரி பகுதிகளில் தங்கள் கிளைகளுக்கு நகைகளை விநியோகம் செய்து விட்டு இறுதியாக தாம்பரத்தில் உள்ள நகைகடைக்கு நகைகளை இறக்க வந்தது தெரியவந்தது.நகைகளுக்கு உரிய ஆவணங்கள் இருந்தும் ஆவணங்களில் நகை கொண்டு வந்த வாகனத்தின் பதிவு எண் இல்லாததால் நகைகளை பறிமுதல் செய்து தேர்தல் பறக்கும் படையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : The van brought,million, gold ,diamond jewelry
× RELATED கிண்டி கத்திப்பாரா சந்திப்பில் விமான...