×

ஆளுங்கட்சி தலையிட வாய்ப்பே இல்லை: அதிமுக அமைப்பு செயலாளரும், செய்தி தொடர்பாளருமான ஜேசிடி பிரபாகர்

தேர்தல் ஆணையத்தில் ஆளுங்கட்சியினர் ஆதாரபூர்வமான புகார்களை கொடுத்தால் நடவடிக்கை எடுக்கிறார்கள். தமிழகம் முழுவதும் குறிப்பிட்ட நாட்களுக்குள்ளாக விண்ணப்பம் செய்கிறவர்களுக்கு முறையாக சிறிய கட்சியாக  இருந்தாலும் பெரிய கட்சியாக இருந்தாலும் எந்த கூட்டணி என்று பார்க்காமல் அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது. முறையாக விண்ணப்பிக்காமல் கடைசி நேரத்தில் அவர்கள் விதித்திருக்கிற விதிகளுக்கு மாறாக கூட்டம் நடத்தி தான் தீருவேன் என்று பிடிவாதம் பிடிக்கும் போது இப்படிப்பட்ட புகார்கள் தான் வரும். தேர்தல்  பறக்கும்படையினர், வருவாய் துறையினர், வருமான வரித்துறையினர் உள்ளிட்ட எல்லா துறையினருமே தனிப்பட்ட அமைப்பு. அதில் ஆளுங்கட்சி தலையிட முடியாது. வருமான வரித்துறையினரை இயக்குவது ஆளுங்கட்சி  அல்ல.
 பறக்கும் படையினர் தேர்தல் ஆணையத்தால் கண்காணிக்கப்படுகிறது. எனவே ஆளுங்கட்சி தலையிடுகிறது என்பது அர்த்தமற்ற குற்றச்சாட்டு. தேர்தல் அதிகாரிகள் பறக்கும்படை காவல் துறை சிறப்பு புலானய்வு துறை  வருமான வரித்துறை இவர்கள் கண்ணில் மண்ணை தூவி பணம் கொடுப்பது என்பது இயலாத காரியம். ஒருவேளை அப்படிப்பட்ட வித்தை எதிர்கட்சியினருக்கு தான் தெரிந்திருக்கும்.

 மத்தியிலிருந்து வந்திருந்த தேர்தல் ஆணையர்களை பார்த்து நாங்களும் பல புகார்களை கொடுத்தோம். எங்களுக்கு எதிராக கொடுக்கப்பட்டிருக்கிற புகார்களில் எந்தவித முகாந்திரமும் இல்லை என்பது புகார் அளித்தவர்களுக்கே  தெரிந்த காரணத்தால் அதை வலியுறுத்தாமல் விட்டுவிட்டனர். தேர்தல் ஆணையர்களிடம் நாங்கள், வேலூரில் எந்த காரணத்தை கொண்டும் தேர்தலை நிறுத்தக்கூடாது, தவறு செய்தவர்கள் யாரோ அவர்களைத் தான் தண்டிக்க  வேண்டும் என்பதை வலியுறுத்தினோம்.  தேர்தலை நிறுத்துவது எங்கள் நோக்கம் அல்ல.




பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : JAITI Prabhakar ,spokesperson ,AIADMK , governor, JAITI Prabhakar, AIADMK secretary ,spokesperson
× RELATED காங். முன்னாள் செய்தி தொடர்பாளர் குப்தா பாஜவில் அடைக்கலம்