×

இந்த ஒருதடவ டிடிவியை நம்புங்க..நடிகர் பிரித்விராஜ் கெஞ்சல்

ஸ்ரீபெரும்பதூர் மக்களவை தொகுதி அமமுக வேட்பாளர் தாம்பரம் நாராயணணை ஆதரித்து நடிகர் பிரித்விராஜ் என்ற பப்லு ஆதம்பாக்கம் பகுதியில் பிரச்சாரம் செய்தார்.
அவர் பேசியதாவது: “ கிப்ட் பாக்சை மக்கள்கிட்ட  காட்டும்போது  அப்படியொரு மகிழ்ச்சி. நீங்கள் யார் யாருக்கோ ஓட்டு போட்டீர்கள். உங்களுக்கு கிடைத்தது என்ன பெரும்  கஷ்டங்களும்,   நஷ்டங்களும் தான். இந்த  ஒரு தடவை டி.டி.வி.யை நம்புங்கள். உங்கள் நம்பிக்கை வீண் போகாது. டிடிவி தினகரன் தேர்ந்தெடுத்து இருக்கும் வேட்பாளர்கள் எல்லாம் முத்துகளும், வைரங்களையும் போன்றவர்கள். இவர்களை அவர் ஏன் தேர்தெடுத்தார் என்றால் இவர்கள் மக்களுக்காக சேவை செய்யக் கூடியவர்கள்.

 மோடி ஆட்சி போகவேண்டும். மோடி நமக்கு நல்லது பண்ணவில்லை என்று நான் சொல்லி நீங்கள் தெரிஞ்சிக்க வேண்டியதில்லை.  மோடி ஆட்சியில் நீட் தேர்வு, ஜிஎஸ்டி, பணமதிப்பிழப்பு போன்ற எல்லாமுமே மக்களை திண்டாட வைத்துள்ளது. இதுக்கு ஒரே மாற்றம் வரவேண்டுமானால் நீங்கள் தைரியமாக, துணிச்சலாக  சந்தோசமாக பரிசு பொருள் சின்னத்துக்கு வாக்களிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Prithviraj Kunju , Actor Prithviraj,ttv
× RELATED மேற்கு மண்டல அதிமுகவில் உள்கட்சி...