×

குடிபோதை குற்றங்களால் பாதிக்கப்படும் குடும்பங்களுக்கு இழப்பீடு குறித்து விளக்கமளிக்க வேண்டும்: தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு

சென்னை: குடிபோதையால் ஏற்படும் குற்றங்களில் பாதிக்கப்படும் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்குவது தொடர்பாக வரும் 25ம் தேதிக்குள் விளக்கமளிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் இரண்டு பேர் தற்கொலை செய்துகொண்ட சம்பவத்தில்,  தற்கொலைக்கு தூண்டியதாக தொடரப்பட்ட வழக்கில் கோவையை சேர்ந்த வீராசாமி உட்பட இருவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தனர்.  இருவருக்கும் நிபந்தனை முன்ஜாமீன் வழங்கி நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் ஏற்கனவே அறிக்கை தாக்கல் செய்ய அரசுக்கு உத்தரவிட்டிருந்தார். இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, இந்த உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல்  செய்துள்ளதாக அரசு வக்கீல் நீதிபதியிடம் தெரிவித்தார். இதைக் கேட்ட நீதிபதி, இந்த விவகாரத்தில் தமிழக அரசு நிலையான ஒரு நிலைப்பாட்டை  எடுக்க வேண்டும். குடிபோதையால் நடைபெறும் குற்ற சம்பவங்களால் பாதிக்கப்படும் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்குவது தொடர்பாக தனி திட்டம் வகுக்க வேண்டியது அவசியம். மேலும், இந்த விஷயத்தை சாதாரணமாக எடுத்துக்கொள்ளாமல், அரசின்  நிலைப்பாட்டை ஏப்ரல் 25ம் தேதிக்குள் தெரிவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : families , Drunken Crimes, Tamilnadu Government, Judge
× RELATED பத்தமடையில் இடிந்து காணப்படும்...