×

சொதப்பும் வாட்சன், ராயுடு முரளி விஜய் விளையாட வாய்ப்பு

சென்னை: சென்னை அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள்  ராயுடு, வாட்சன் ஆகியோர் தொடர்ந்து சொதப்பி வரும் நிலையில் உள்ளூர் ஆட்டக்காரர் முரளி விஜய்க்கு வாய்ப்பு  கிடைக்கலாம் என்று கூறப்படுகிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் சென்னையை சேர்ந்த முரளி விஜய், கோவையை சேர்ந்த ஜெகதீசன் நாரயண் ஆகியோர் மட்டுமே உள்ளூர் ஆட்டக்காரர்கள். கடந்த சீசனில்  இருந்த முரளி விஜய் சில போட்டிகளில் மட்டுமே வாய்ப்பு அளிக்கப்பட்டது. இந்த சீசனில் இதுவரை சென்னை அணி விளையாடிய 4 போட்டிகளிலும் முரளி விஜய்க்கு வாய்ப்பளிக்கபடவில்லை. இத்தனைக்கும் முரளி விஜய் நல்ல ஆட்டத்திறனில் இருக்கிறார். கடந்த மாதம் நடைப்பெற்ற சையத் முஷ்டாக் அலி டி20 போட்டியில்  தமிழ்நாடு அணி 6 போட்டிகளில் விளையாடியது.

 அதில் 4 போட்டிகளில் விளையாடிய  முரளி விஜய் 107, 74, 77ரன்கள் என ஒரு சதம், 2 அரை சதம் எடுத்தார். ஆனால் அதே தொடரில் உத்ரபிரதேச அணிக்காக 6 போட்டிகளில் விளையாடிய ரெய்னா மொத்தம் 80 ரன்கள் தான் எடுத்தார். அதனால் உத்ரபிரதேசம் சூப்பர் லீக் சுற்றுக்கு தகுதிப் பெற்றும் அவர் அணியில் இருந்து விலக நேர்ந்தது. ஐதராபாத் அணிக்காக விளையாடிய அம்பாதி ராயுடு எடுத்த ரன்கள் 101. இவர்கள் 2 பேரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாட வாய்ப்பு கிடைத்துள்ளது. ஆனால் முரளிக்கு ஆடும் அணியில் வாய்ப்பு கிடைக்கவில்லை. இப்போது ஐபிஎல் போட்டியில்  தொடக்க வீரராக களமிறங்கும் ராயுடு   4 போட்டிகளில் முறையே 28, 5, 1, 0 ரன்கள் எடுத்துள்ளார். இன்னொரு தொடக்க ஆட்டக்காரர் ஷேன் வாட்சன் எடுத்த ரன்கள் 0, 44, 13, 5 தான்.

இவர்கள் இருவரும் இப்படி தொடர்ந்து சொதப்புவதால் நாளை நடைபெறும் போட்டியில் முரளி விஜய் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்க வாய்ப்பு உள்ளது.  சென்னையில் நடைபெறும் போட்டி என்பதால் உள்ளூர் ஆட்டக்காரர் களமிறங்குவது சென்னை ரசிகர்களுக்கு உற்சாகத்தை அளிக்கும். பஞ்சாப் அணியில் தமிழக வீரர்கள்
நாளை சென்னையில் நடைபெறும் 18வது லீக் போட்டியில்  சென்னை - பஞ்சாப் அணிகள் மோத உள்ளன. சென்னை அணியில் உள்ளூர் ஆட்டக்காரர்கள் இல்லாவிட்டாலும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியில் தமிழகத்தைச் சேர்ந்த கேப்டன் அஸ்வின், பந்து வீச்சாளர்கள் முருகன் அஸ்வின்,  வருண் சக்கரவர்த்தி ஆகியோர் விளையாடுவார்கள். அதனால் நீண்ட நாட்களுக்கு பிறகு சென்னை ரசிகர்களுக்கு அஸ்வின்களின் ஆட்டத்தை ரசிக்க வாய்ப்பு.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Vadachan ,Rayudu Murali ,Vijay , Watson, Rayudu Murali Vijay
× RELATED நடிகரும் தமிழக வெற்றி கழகத் தலைவருமான...