×

தேர்தல் விதி மீறி பிளக்ஸ் பேனர்கள் அதிமுக - அமமுகவினர் மோதல் பேனர்கள் கிழிப்பு, தள்ளுமுள்ளு: உசிலம்பட்டியில் பரபரப்பு

உசிலம்பட்டி: மதுரை மாவட்டம், உசிலம்பட்டி, பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் கல்லூரியில் மூக்கையாத்தேவரின் 97வது பிறந்தநாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. விழாவை முன்னிட்டு அவரது நினைவிடத்தில் மலர் வளையம், மாலைகள் வைத்து பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் மரியாதை செலுத்தினர். அமமுக சார்பில் தேனி மக்களவை அமமுக வேட்பாளர் தங்கத்தமிழ்செல்வன், நிர்வாகிகளுடன் மரியாதை செலுத்தினார். அப்போது மூக்கையாத்தேவர் நினைவிடத்தின் எதிரே 4 பேனர்களை அதிமுகவினர் வைத்திருந்தனர். அதில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தேனி மக்களவை வேட்பாளர் ரவிந்திரநாத்குமார் படங்கள் மற்றும் இரட்டை இலை சின்னம்  இடம் பெற்றிருந்தது.

இது தேர்தல் விதிமீறல். இதனை உடனடியாக அகற்றவேண்டும்’ என போலீசாரிடம் அமமுக தொண்டர்கள் வாக்குவாதத்தில்  ஈடுபட்டனர். இதனிடையே அதிமுக, அமமுக தொண்டர்களிடையே கைகலப்பு ஏற்படும் சூழல் உருவானது. அப்போது, ‘‘பேனர்களை அதிகாரிகள் அகற்றாவிட்டால் நாங்கள் அகற்ற வேண்டியது வரும்’’ என அமமுகவினர் பேனர்களை கிழிக்க முயன்றனர். போலீசார் பேனர்களை பாதுகாக்க முயன்றதால் அவர்களுடன் கைகலப்பில் ஈடுபட்டனர். இதில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. எனினும் அவர்கள் பேனர்களை கிழித்து எறிந்தனர். அடுத்ததாக அமைச்சர்கள் வர இருந்ததால், போலீசார் அமமுகவினரை சமாதானப்படுத்தி அனுப்பினர். பிறகு கிழிக்கப்பட்ட பேனர்கள் அனைத்தும் முழுமையாக அகற்றப்பட்டது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : breach ,AIADMK ,Pushpu , Electoral fate, Blax Banners, AIADMK, Ammk
× RELATED அதிமுக தேர்தல் பிரசாரத்தின்போது வாகன...