×

போயிங் 737 மேக்ஸ் ரக விமானத்தில் சி.இ.ஓ. டெண்ணிஸ் முய்லென்பெர்க் பயணித்து சோதனை - போயிங்

அமெரிக்கா: அமெரிக்காவின் சியாட்டில் உள்ள போயிங் நிறுவனம் தனது 737 மேக்ஸ் ரக விமானத்தின் ஆன்டி-ஸ்டால் மென்பொருளை வெற்றிகரமாகப் பரிசோதித்தபோது அதில் தங்களது தலைமைச் செயலதிகாரியும் பயணித்ததாக அறிவித்துள்ளது. போயிங் 737 மேக்ஸ் 8 ரகத்தை சேர்ந்த 2 விமானங்கள் விபத்துக்குள்ளானதை அடுத்து அதன் MCAS ஆன்டி-ஸ்டால் மென்பொருளில் கோளாறு இருப்பது தெரியவந்தது.
 
இந்நிலையில், அந்த மென்பொருளை சரிசெய்த பின் போயிங் 737 மேக்ஸ் 8 போன்றே காக்பிட் கொண்ட அதைவிட சிறிய ரக விமானமான போயிங் 737 மேக்ஸ் 7-ஐக் கொண்டு சோதனை நடத்தப்பட்டது. அப்போது போயிங் தலைமைச் செயல் அதிகாரி டெண்ணிஸ் முய்லென்பெர்க் அந்த விமானத்தில் பயணித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த அறிக்கையும், இனி மேற்கொள்ளவிருக்கும் சோதனைகளின் அறிக்கைகளும் அமெரிக்க வான்போக்குவரத்து நிர்வாகத்துக்கு அனுப்பப்படவுள்ளது.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : CEO ,Boeing 737 Max Flight ,Boeing ,Tennys Muylenburg , USA, Boeing, Chief Executive Officer
× RELATED போயிங் ஜெட் விமானம் புறப்படும்போது...