×

கூகுள் நிறுவனம் மூலம் தேர்தல் விளம்பரம் செய்வதில் பாஜக முதலிடம்

டெல்லி: தொழில்நுட்ப வளர்ச்சிக்கேற்ப அரசியல் கட்சிகளும் தங்கள் விளம்பர யுக்திகளை மாற்றி வருகின்றன. நாளிதழ், தொலைக்காட்சிகளில் மட்டுமே முந்தைய காலங்களில் நடைபெற்ற தேர்தல்களில், அரசியல் கட்சிகள் பெருமளவு விளம்பரத்துக்காக செலவிட்டு வந்துள்ளன. தற்போதுள்ள இந்த நவீன காலத்தில், இணைய விளம்பரங்களிலும் கவனம் செலுத்தி வருகின்றன.அந்த வகையில், பிரபல இணைய தேடு பொறி நிறுவனமான கூகுளில் பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் அதிக அளவில் அரசியல் விளம்பரம் செய்து வருகின்றன.

கடந்த பிப்ரவரி 19 ஆம் தேதி முதல் தற்போது வரை கூகுளில் அதிக விளம்பரம் செய்ததில், மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா கட்சி முதலிடத்தில் உள்ளது. அக்கட்சி மட்டும் ஒட்டுமொத்த விளம்பரத்தில், 32 சதவீதம் விளம்பரம் செய்துள்ளது.கூகுள் விளம்பரத்திற்காக மட்டும் பாஜக 1.21 கோடி ரூபாயை செலவிட்டுள்ளது. அதேவேளையில், பாஜகவின் நேர் எதிர்க்கட்சியான காங்கிரஸ் 6ஆவது இடத்தில் உள்ளது. காங்கிரஸ் கட்சி தற்போது வரை 54,100 ரூபாயை  செலவிட்டுள்ளது.கூகுளில் அதிக விளம்பரம் செய்த கட்சிகள் பட்டியலில் 2ஆவது இடத்தில் ஜெகன் மோகன் ரெட்டியின் கட்சி உள்ளது, அக்கட்சி 1.04 கோடி ரூபாய் செலவிட்டுள்ளது. 3ஆவது இடத்தில் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் உள்ளது. இவரது கட்சி 85.25 லட்சம் ரூபாயை அரசியல் விளம்பரத்திற்காக செலவழித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : BJP ,election campaign ,Google , Google, Congress, Congress
× RELATED அதிமுக தேர்தல் பிரசாரத்தின்போது வாகன...