×

சேலத்தில் தொடர்ந்து கொளுத்தும் வெயில் : வாகன ஓட்டிகள் அவதி

சேலம்: சேலம் மாவட்டத்தில் 103 டிகிரியை தாண்டி வெயில் அதிகரித்துள்ளது. அக்னி நட்சத்திர காலத்தில் இதன் தாக்கம் மேலும் உயரக்கூடும் என வானிலை  அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை பெய்யாததால், நடப்பு ஆண்டில் கடும் வறட்சி நிலவுகிறது. சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல் போன்ற வடமாவட்டங்களும் கடும் வெயில், வறட்சியால் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளன. பருவ மழை இல்லாதது, மழைக்கான முக்கிய காரணியாக கருதப்படும் மரங்கள் அழிக்கப்பட்டது, விவசாய பரப்பளவு குறைந்து வீட்டு மனைகளின் பரப்பளவு அதிகரித்தது போன்ற காரணங்களால் கடும் வறட்சி ஏற்பட்டுள்ளது.

இதனால், முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு இந்தாண்டு அக்னி நட்சத்திரத்துக்கு முன்பே, வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. பகலில் 10 மணிக்கு மேல் வெயில் கொளுத்த துவங்குகிறது. இதனால், பகல் நேரங்களில் ரோடுகளில் மக்கள் நடமாட்டம் குறைவாக காணப்படுகிறது. காய்கறி, ஜவுளி, நகைகள் வாங்க செல்வோரும் பகல் நேரங்களை தவிர்த்து, மாலை நேரங்களில் செல்வதை வழக்கமாக்கி வருகின்றனர். சேலம் மாவட்டத்தில் மார்ச் 17ம்தேதி 100 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலை பதிவாக தொடங்கியது. இதைதொடர்ந்து ஏப்ரல் 1ம் தேதியில் இருந்து பத்து நாட்களாக 101 டிகிரிக்கு மேல் வெப்பநிலை பதிவாகி உள்ளது.

அதன்படி, கடந்த மார்ச் 18ம் தேதி 100.6 டிகிரியும், 19ம் தேதி 101.5 டிகிரியும், 20ம் தேதி 100.6 டிகிரியும் 21ம் தேதி 101.9 டிகிரியும் வெயிலின் தாக்கம் பதிவானது. 22ம் தேதி 101.7 டிகிரியும், 23ம் தேதி உச்ச அளவாக 103.3 டிகிரியும், 24ம் தேதி 103,5, 25ம் தேதி 103.5 டிகிரியும், 26ம் தேதி102.4 டிகிரியும், 27ம் தேதி 101.9 டிகிரியும் பதிவானது.  சேலத்தில் அதிகபட்ச மாக கடந்த 30 மற்றும் 1ம் தேதி 105 டிகிரி பதிவானது. இதை தொடர்ந்து, நேற்று முன்தினம் 103. டிகிரி பாரன்ஹீட்டாக வெப்ப நிலை பதிவாகி இருந்த நிலையில், நேற்றும் 103.7 டிகிரி பாரன்ஹீட்டாக பதிவானது. இன்னும், இரண்டு வாரங்களில் அக்னி நட்சத்திரம் சீசன் தொடங்க உள்ள நிலையில், வெயிலின் தாக்கம் மேலும் உயரக்கூடும் என வானிலை  அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : motorists , Salem, sunny, motorists
× RELATED வாகன ஓட்டிகளிடம் வசூல் வேட்டை வீடியோ...