×

நீர்வரத்து குறைந்தது : சுற்றுலா பயணிகள் கூட்டமின்றி களக்காடு தலையணை வெறிச்

களக்காடு: கொளுத்தும் வெயிலால் நீர்வரத்து குறைந்தால் சுற்றுலா பயணிகள் கூட்டமின்றி களக்காடு தலையணை வெறிச்சோடியது. நெல்லை மாவட்டம் களக்காடு புலிகள் காப்பகத்திற்குட்பட்ட மேற்குத்தொடர்ச்சி மலையில் தலையணை உள்ளது. இங்கு ஓடும் தண்ணீரில் குளுமை அதிகம் என்பதால், இதில் குளிக்க சுற்றுலா பயணிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். தினமும் ஏராளமானோர் தலையணைக்கு வந்து குளித்துச் செல்வர். இந்நிலையில் கடந்த டிசம்பர் மாதத்திற்கு பின் களக்காடு மேற்குத்தொடர்ச்சி மலையில் மழை பெய்யவில்லை. மேலும் தற்போது கோடை வெயில் கொளுத்தி வருகிறது. சுட்டெரிக்கும் வெயிலால் ஆறு, கால்வாய், குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகள் வறண்டு வருகின்றன. இதுபோல மேற்குத்தொடர்ச்சி மலையிலும் கடும் வெயில் காணப்படுவதால் அருவி, நீரோடைகளில் தண்ணீர் வரத்து குறைந்து வருகிறது.

களக்காடு தலையணையிலும் அனல் பறக்கும் வெயிலால் நீர்வரத்து குறைந்தது. தடுப்பணையை தாண்டி சிறிதளவு தண்ணீரே கொட்டுகிறது. இந்த தண்ணீரும் குளிக்க ஏதுவாக இல்லை. மழை பெய்யாவிட்டால் இன்னும் ஒரு சில நாட்களில் தண்ணீர் முற்றிலும் வறண்டு விடும் அபாயம் நிலவுகிறது. நீர்வரத்து குறைந்து உள்ளதால் சுற்றுலா பயணிகளின் வருகையும் குறைந்துள்ளது. ஒரு சிலர் மட்டுமே வந்து செல்கின்றனர். இதையடுத்து தலையணை சுற்றுலா பயணிகள் கூட்டமின்றி வெறிச்சோடி காட்சி அளிக்கிறது. இங்குள்ள நீர்வீழ்ச்சி, சிறுவர் பூங்கா, அருங்காட்சியக பகுதிகள் கூட்டமின்றி களை இழந்துள்ளது. மரங்களும் பசுமையை இழந்து காய்ந்து வருவதால் காட்டு தீ விபத்தை தடுக்கும் பொருட்டு வனத்துறையினரும் கண்காணிப்பு பணிகளை தீவிரப்படுத்தி உள்ளனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Kalakkadu , Tourists, Kalakkadu,thalayanai
× RELATED மணிமுத்தாறு அருவியில் பராமரிப்பு...