×

பறக்கும்படை சோதனை எதிரொலி : நகை, கைத்தறி சேலை வியாபாரம் டல், வியாபாரிகள் கவலை

காரைக்குடி: தேர்தல் ஆணையத்தின் கிடுக்குபிடி உத்தரவால் நகை மற்றும் கைத்தறி சேலை வியாபாரம் முடங்கிபோய் உள்ளது. காரைக்குடியில் 100 ஆண்டுகளுக்கு மேலாக கைத்தறி நெசவுத்தொழில் உள்ளது. இங்கு உற்பத்தி செய்யப்படும் செட்டிநாடு காட்டன் சேலைகள் மிகவும் பிரபலம். மொத்த வியாபாரிகள் மூலம் மதுரை, சென்னை, கோவை போன்ற மாவட்டங்களுக்கும், பெங்களூரு, டெல்லி உட்பட பல்வேறு மாநிலங்களுக்கும் கொண்டு செல்லப்படுகிறது. காரைக்குடி மற்றும் அதன் சுற்றுப்புற கிராமங்களில் தலைச்சுமையாக விற்பனை செய்வது உண்டு. நெசவுத் தொழிலை நம்பி 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. தற்போது கோடைகாலம் துவங்கி உள்ள நிலையில் செட்டிநாட்டு காட்டன் சேலைகளுக்கு நல்ல மவுசு இருக்கும்.

இதனால் தொழில் சூடுபிடித்து உள்ள நிலையில் தேர்தல் ஆணையம் மொத்தமாக சேலை மற்றும் பொருட்களை கொண்டு செல்லக்க கூடாது. உரிய ஆவணம் வேண்டும் என பல்வேறு உத்தரவிட்டுள்ளது. அதேபோல் இப்பகுதியில் உள்ள நகைக் கடைகளுக்கு கோவை மற்றும் மதுரை போன்ற பகுதியில் இருந்து அதிக அளவில் தங்கம் மற்றும் வெள்ளி பொருட்கள் கொண்டு வரப்படும். தற்போது உள்ள கிடுக்குபிடி உத்தரவால் இப்பொருட்களின் வரத்தும் இல்லை. இதனால் நகைக்கடை தொழிலும் முடங்கிபோய் உள்ளது. இதேபோல் சிறிய வர்த்தக நிறுவனங்களுக்கு நடைபெறும் பணம் தொடர்பான பரிவர்த்தனைகள் மற்றும் பொருட்கள் கொண்டு வருவதில் உள்ள பிரச்சனையால் இத்தொழில் நடத்துவதே சிரமமாக உள்ளது என வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

வியாபாரிகள் கூறுகையில், ‘‘தேர்தல் ஆணையத்தின் உத்தரவால் திருமண சீர்வரிசை வாங்க கடைக்கு வருபவர்கள். சிறுவியாபாரம் மற்றும் சிறிய அளவிலான தொழிற்சாலைகள் பாதிக்கப்படுகிறது. சுற்றுப்புற கிரமங்களில் உள்ள சிறுகடைகளுக்கு வாகனத்தில் சென்ற பொருட்களை தந்துவிட்டு மாலை பணம் வசூல் செய்து மொத்தமாக கொண்டு வருவார்கள். பணம் கொண்டுவர உரிய ஆவணம் கேட்பதால் இவர்கள் யாரும் பொருட்கள் சப்ளை செய்ய போகவில்லை’’ என்றனர்.
நெசவாளர்கள் கூறுகையில், ‘‘இத்தொழிலை பொறுத்தவரை சீசன் வியாபாரம் தான் கைகொடுக்கும். தற்போது கோடை துவங்கிய உள்ள நிலையில் கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு நல்ல வியாபாரம் இருக்கும் என இருந்தோம். ஆனால் துவக்கத்திலேயே வியாபாரம் இல்லை. மொத்த வியாபாரிகள் யாரும் வாங்க வராததால் வியாபாரம் முடங்கிபோய் உள்ளது’’ என்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Echo ,merchants ,Tull , Flying force, handloom, merchants
× RELATED வணிகர் சங்கங்களின் பேரமைப்பு...