×

பிரக்சிட் விவகாரத்தில் பிரதமர் தெரசா மேக்கு எதிர்ப்பு: மந்திரி பதவியில் இருந்து ராஜினாமா

லண்டன்: ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறுவதற்கான அவகாசம் குறைந்துக் கொண்டே வரும் நிலையில், இங்கிலாந்து பிரதமர் தெரசா மே எதிர்க்கட்சித் தலைவர் ஜெரமி கார்பினுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இங்கிலாந்து அமைச்சர்கள், உயர் அதிகாரிகள் உள்பட பலர் இந்தப் பேச்சுவார்த்தையில் கலந்துக் கொண்டனர். தற்போது பிரக்சிட் விவகாரத்தில் நீடிக்கும் குழப்பத்திற்கு தீர்வு காண இரு தலைவர்களும் சிறந்த ஒத்துழைப்பை நல்கியதாக இங்கிலாந்து அரசு தெரிவித்துள்ளது. இன்னும் சில நாட்களே அவகாசம் உள்ள நிலையில் பிரக்சிட் குறித்து முடிவெடுக்க மேலும் அவகாசம் கோரியுள்ள தெரசா மே, நாடாளுமன்றத்தின் ஒருமித்த கருத்தை உருவாக்க முயன்று வருகிறார். ஆனால் பேச்சுவார்த்தை நடத்துவதால் மட்டும் காலக்கெடுவை நீட்டிக்க முடியாது என்று ஐரோப்பிய யூனியன் எச்சரித்துள்ளது. .

ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து வெளியேறுவது தொடர்பான பிரெக்ஸிட் விவகாரத்தில், பிரிட்டன் பாராளுமன்றத்தில் 4-வது முறையாக ஓட்டெடுப்பு நடத்த பிரதமர் தெரசா மே பரிசீலித்து வருகிறார். இது தொடர்பாக அவர் எதிர்க்கட்சி தலைவரான ஜெரேமி கார்பைனை சந்தித்து பேச திட்டமிட்டுள்ளதாக தெரிவித்து குறிப்பிடத்தக்கது. ஆனால் இதற்கு எதிராக வேல்ஸ் பகுதிக்கான மந்திரி நைஜல் ஆடம்ஸ் போர்க்கொடி உயர்த்தி உள்ளார். ஜெரேமி கார்பைனை பிரதமர் தெரசா மே சந்தித்து பேச இருப்பது மிகப்பெரிய தவறு என அவர் கூறினார். பிரதமர் தெரசா மேக்கு தனது எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில், அவர் மந்திரி பதவியில் இருந்து நேற்று ராஜினாமா செய்தார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Teresa Mack ,Prakrit ,minister , Prime Minister,Teresa Mack,Prakrit affair,resign, minister
× RELATED கெஜ்ரிவால் கைதுக்கு வாக்கின் மூலம்...