×

மார்க்கெட் இழந்த நடிகரின் போலியான படம், பிஎம் நரேந்திர மோடி: காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜேவாலா தாக்கு

டெல்லி: மார்க்கெட் இழந்த நடிகரின் போலியான படம், பிஎம் நரேந்திர மோடி என காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜேவாலா தெரிவித்துள்ளார். மோடியின் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டு, விவேக் ஓபராய்  நடிப்பில், ஓமங் குமார் இயக்கத்தில் உருவான `பிஎம் நரேந்திர மோடி’ திரைப்படம் வரும் 12-ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. பெரும் எதிர்பார்ப்பை இப்படம் ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில், படத்தை  எதிர்த்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் பல்வேறு பொதுநல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அதில் தேர்தல் சமயத்தில் இதுபோன்ற படத்தை எடுப்பது, வெளியிடுவது தேர்தல் நடத்தை விதிமீறல் என்று தேர்தல்  ஆணையத்திடம் புகார் அளிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. ஆனால், கடந்த திங்கள்கிழமை 1-ம் தெதி இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், இதில் விதிமுறை மீறல் இல்லை என வழக்கை தள்ளுபடி செய்தது.

இது குறித்து நேற்று படத்தில் மோடியாக நடித்த விவேக் ஓபராய் கூறுகையில், ‘இந்த படத்தை ஏன் இந்த அளவு சிலர் எதிர்க்கின்றனர்?  என புரியவில்லை. மூத்த மற்றும் பிரபல வக்கீல்களான அபிஷேக் சிங்வி, கபில் சிபல்  ஆகியோர் இது போன்ற சாதாரண படத்திற்கு தடை கோரி மனு அளித்ததும் ஏன்? என தெரியவில்லை. இவர்கள் மோடியின் படத்திற்கு பயப்படுகிறார்களா?அல்லது  காவலாளியின் தடியை கண்டு பயப்படுகிறார்களா?’ என  கேள்வி எழுப்பியிருந்தார்.

இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜேவாலா பதில் அளித்துள்ளார். இந்த படம் மார்க்கெட் இழந்த நடிகர், தோல்வியடைந்த தயாரிப்பாளர், மற்றும் தான் ஜீரோ என நிரூபித்த ஒருவரின்  கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்டதாகும். இந்த படம் கருப்புப்பணத்தினை கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளதா என நிச்சயம் விசாரிக்க வேண்டும். மேலும் பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்க்கை வரலாற்றை தேர்தல்  ஆணையம் கவனத்தில் கொள்ள வேண்டும் என ஏற்கனவே கூறியுள்ளோம். இதற்கிடையே, இப்படத்துக்கு தடை கோரி கர்நாடக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. வழக்கறிஞர் ரமேஷ் நாயக் என்பவர் இந்த  வழக்கை தாக்கல் செய்துள்ளார். விரைவில் இதன் மீதான விசாரணை நடக்கும் என்று தெரிகிறது. தேர்தல் நேரத்தில் பிஎம் நரேந்திர மோடி படம் வெளியிட அனுமதிக்கக்கூடாது என்று தேர்தல் கமிஷனுக்கு காங்கிரஸ் மற்றும்  இந்திய கம்யூனிஸ்டு கட்சிகள் மனு அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Randeep Surjewala ,Narendra Modi ,Congress , Market, PM Narendra Modi, Vivek Oberoi, Congress spokesman, Randeep Sarjewala
× RELATED நடிகை ஹேமமாலினி குறித்து விமர்சனம்...