×

ரேபரேலி தொகுதியில் பாஜ சார்பில் சோனியாவை எதிர்த்து கட்சி தாவியவர் போட்டி: அகிலேசை எதிர்த்து நிற்கிறார் நடிகர்

புதுடெல்லி: சோனியாவை எதிர்த்து தினேஷ் பிரதாப் சிங்கும், சமாஜ்வாடி தலைவர் அகிலேசை எதிர்த்து போஜ்புரி நடிகரும் போட்டியிடுகின்றனர் என பாஜ அறிவித்துள்ளது.  உத்தர பிரதேசத்தில் ஏப்ரல் 11ம் தேதி தொடங்கி 7 கட்டமாக மக்களவை தேர்தல் நடைபெறுகிறது. இதையொட்டி பாஜ, காங்கிரஸ் தனது வேட்பாளர்களை அறிவித்து வருகின்றன. இந்நிலையில், இம்மாநிலத்தில் சோனியா, அகிலேஷ் உள்ளிட்ட தலைவர்களை எதிர்த்து போட்டியிடும் வேட்பாளர்களை பாஜ நேற்று அறிவித்தது. இதன்படி, அசம்கார் தொகுதியில் சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேசை எதிர்த்து போஜ்புரி நடிகரும் பாடகருமான தினேஷ் லால் யாதவை களமிறக்கி உள்ளது. அகிலேசின் தந்தை முலாயம் சிங் யாதவை எதிர்த்து மெயின்புரி தொகுதியில் பிரேம் சிங் சக்யா போட்டியிடுகிறார்.

காங்கிரஸ் கோட்டையாக கருதப்படும் ரேபரேலியில் போட்டியிடும் ஐமு கூட்டணி தலைவர் சோனியாவை எதிர்த்து தினேஷ் பிரதாப் சிங் களமிறக்கப்பட்டு உள்ளார். இவர் கடந்த ஆண்டு காங்கிரசில் இருந்து விலகி பாஜ.வில் சேர்ந்தவர். உள்ளூரை சேர்ந்த இவர் சோனியாவை எதிர்த்து போட்டியிடுகிறார். மேலும், மச்லிஷார் தொகுதியின் தற்போதைய எம்பி.யான ராம் சரித்திர நிஷாத்துக்கு பதிலாக வி.பி. சரோஜ் போட்டியிடுகிறார். மும்பை வடகிழக்கு தொகுதியில் தற்போதைய எம்பி.யாக உள்ள கிரித் சோமையாவுக்கு பதிலாக மனோஜ் கோடால் போட்டியிடுவார் எனவும் பாஜ அறிவித்துள்ளது.. சோமையா போட்டியிட பாஜ கூட்டணி கட்சியான சிவசேனா எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Rae Bareli ,BJP , Rae Bareilly, Sonia, BJP
× RELATED உத்தரப்பிரதேச மாநிலம் ரேபரேலியில்...