×

மசூத் அசாரை தீவிரவாதியாக அறிவித்தால் தெற்காசியாவில் அமைதி ஏற்படாது: அமெரிக்காவுக்கு சீனா எச்சரிக்கை

பீஜிங்: மசூத் அசாரை சர்வதேச தீவிரவாதியாக அறிவிக்கும் அமெரிக்காவின் முயற்சிக்கு கண்டனம் தெரிவித்துள்ள சீனா, இது இந்த பிரச்னையை மேலும் சிக்கலாக்குவதோடு தெற்காசியாவில் அமைதியை ஏற்படுத்தாது என தெரிவித்துள்ளது.  காஷ்மீர் மாநிலம், புல்வாமாவில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் கொல்லப்பட்டனர். இதற்கு, மசூத் அசாரின் ஜெய்ஷ் இ முகமது அமைப்பு பொறுப்பேற்றது. இதை தொடர்ந்து, மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்க வலியுறுத்தி ஐநா.வில் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் இதற்கு ஆதரவு அளித்தன. ஆனால், சீனா தனது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி முட்டுக்கட்டை போட்டுவந்தது.  இந்த சூழ்நிலையில், மசூத் அசாரை தீவிரவாதியாக அறிவிக்கும் தீர்மானத்தை ஐநா பாதுகாப்பு கவுன்சிலுக்கு அமெரிக்கா நேரடியாக அனுப்பியது.

இது சீனாவுக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து சீன வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் கெங் சுவாங் கூறியதாவது:   மசூத் அசாரை தடை செய்யப்பட்ட தீவிரவாதிகள் பட்டியலில் வெளியிட அமெரிக்கா அனைத்து வகையான முயற்சிகளையும் மேற்கொள்வதாக கூறியுள்ளது. இது ஆக்கப்பூர்வமான முயற்சி அல்ல. மாறாக, மோசமான முன்னுதாரணமாகத்தான் இது திகழும். ஐநா குழுவில் உள்ள பெரும்பாலான உறுப்பினர்கள், 1267 குழு மூலம் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண்பதைத்தான் விரும்புகிறார்கள். சீனா இதற்காகத்தான் கடும் முயற்சிகளை மேற்கொள்கிறது. இது அமெரிக்காவுக்கும் தெரியும். இருப்பினும், அமெரிக்கா தீர்மானத்தை நேரடியாக கொண்டு வர அழுத்தம் தருகிறது. இது பிரச்னையை மேலும் சிக்கலாக்கி விடும். தெற்காசிய நாடுகளில் அமைதி ஏற்படுத்த உதவாது’’ என்றார்.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : China ,South Asia ,South Korea , Masood Azhar, Terrorist, South Asia, United States, China
× RELATED தென் சீன கடலுக்கு பயணம்: 3 இந்திய போர் கப்பல்கள் சிங்கப்பூர் சென்றடைந்தன