×

இந்தியா வந்த இஸ்ரேல் அதிகாரிகளின் அலட்சியம்: மாயமான ஆயுத கொள்முதல் ஆவணம் கிடைத்தது எப்படி?

ஜெருசலேம்: இந்தியா, இஸ்ரேல் இடையே மேற்கொள்ளப்பட்ட ஆயுத கொள்முதல் ரகசிய ஒப்பந்தம் மாயமாகி பின் கிடைத்த பரபரப்பு சம்பவங்கள் குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளன. இஸ்ரேல் நாட்டின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மிர் பெ் ஷப்பாத் தலைமையிலான பிரதிநிதிகள் குழு கடந்த ஜனவரி மாதம் இந்தியா வந்திருந்தது. இக்குழு பிரதமர் மோடி மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலை சந்தித்து, ஆயுத கொள்முதல் ஒப்பந்தம் குறித்து பேச்சுவார்த்தை நடத்தியது. இதில், உளவு விமானம், ஆளில்லா விமானம், பீரங்கி தடுப்பு ஏவுகணைகள், ரேடார் அமைப்புகள், பீரங்கிகள் ஆகியவற்றை இஸ்ரேலிடம் இருந்து இந்தியா வாங்குவதற்கான ஆரம்பக்கட்ட ஆலோசனை நடத்தப்பட்டது. ஆயுதங்கள் குறித்த ரகசிய தகவல்கள் அடங்கிய ஆவணங்கள் தயார் செய்யப்பட்டன. இந்த ஆவணங்களுடன் இஸ்ரேல் குழு புறப்பட ஆயத்தமானது.  

சொந்த நாட்டிற்கு செல்வதற்கு முன்பாக அவர்கள், இஸ்ரேலிய ஓட்டல் ஒன்றில் இரவு உணவு சாப்பிட்டுள்ளனர். அங்கு கொள்முதல் ஆவணங்களை  தவற விட்டனர்.அவர்கள் சொந்த நாடு திரும்பிய பிறகு ரகசிய ஆவணங்கள் இல்லாதது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இது பற்றி ரகசிய விசாரணை நடத்தப்பட்டது. அதில், , இஸ்ரேல் குழு உணவருந்திய ஓட்டலில் வெயிட்டராக பணியாற்றிய ஒரு இளைஞர், அந்த ஆவணங்களை  பத்திரப்படுத்திய அவர், இஸ்ரேலில் உள்ள தனது நண்பருக்கு தகவல் தெரிவித்துள்ளார். அந்த நண்பரின் தாய், இந்தியாவில் உள்ள இஸ்ரேல் தூதரகத்தில் பணியாற்றுபவர். உடனே அந்த நண்பர் இந்தியாவுக்கு வந்து, நண்பனிடமிருந்த கோப்புகளை வாங்கிச் சென்று அரசிடம் பத்திரமாக ஒப்படைத்துள்ளார். இதன்பிறகே இஸ்ரேலின் தேசிய பாதுகாப்பு கவுன்சில் அதிகாரிகள் நிம்மதி அடைந்துள்ளனர்.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Israeli ,India ,Arms , India, Israel
× RELATED இஸ்ரேல் விமான தாக்குதலில் ஹமாஸ் தலைவரின் மகன்கள் பலி