×

வில்லாரியலுடன் டிரா செய்தது பார்சிலோனா

ஸ்பெயினில் நடைபெற்று வரும் லா லிகா கால்பந்து சாம்பியன்ஷிப் தொடரில், வில்லாரியல் அணியுடன் மோதிய பார்சிலோனா 4-4 என்ற கோல் கணக்கில் கடுமையாகப் போராடி டிரா செய்தது. தொடக்கத்தில் அபாரமாக விளையாடி ஆதிக்கம் செலுத்திய அந்த அணிக்கு கோடின்யோ 12வது நிமிடத்திலும், மால்கம் 16வது நிமிடத்திலும் கோல் போட்டனர். இதைத் தொடர்ந்து பதில் தாக்குதலை தீவிரப்படுத்திய வில்லாரியல் அணி வீரர்கள் அடுத்தடுத்து கோல் போட்டு அசத்த 4-2 என முன்னிலை பெற்றது.

கடைசி கட்டத்தில் பார்சிலோனா அணியின் நட்சத்திர வீரர்கள் லியோனல் மெஸ்ஸி (90வது நிமிடம், பிரீ கிக்), லூயிஸ் சுவாரெஸ் (90’+3) கோல் அடித்து 4-4 என டிரா செய்ய உதவினர். கோல் அடித்த மகிழ்ச்சியில் பார்சிலோனா வீரர்கள். பார்சிலோனா 30 லீக் ஆட்டத்தில் 70 புள்ளிகள் பெற்று தொடர்ந்து முன்னிலை வகிக்கிறது. அத்லெடிகோ மாட்ரிட் (62), ரியல் மாட்ரிட் (57), ஜெடாபி (47) அணிகள் அடுத்த இடங்களில் உள்ளன.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Villarlis Barcelona , Barcelona, Villarreal
× RELATED ஐபிஎல் டி20: கொல்கத்தா அணிக்கு எதிரான...