சீர்காழியில் தேமுதிக கூட்டத்தில் பயங்கர மோதல்

சீர்காழி: நாகை மாவட்டம் சீர்காழி பழைய பஸ் நிலையம் அருகே ஒரு தனியார் தங்கும் விடுதி உள்ளது. தேர்தல் பிரசாரத்திற்காக தேமுதிக பொருளாளர் பிரேமலதா  சீர்காழி வருவதையொட்டி நேற்று முன்தினம் இரவு இங்கு தேமுதிக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் கலந்து கொண்ட சீர்காழி தேமுதிக நகர செயலாளர்  செந்தில் என்பவரிடம் கேப்டன் மன்ற மாவட்ட செயலாளர் சேகர் (48) என்பவர், ‘‘என்னிடம்  எந்த தகவலும் ஏன் சொல்வதில்லை?’’ என்று கேட்டுள்ளார். இதனால்  இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பானது.

இதில் ஆத்திரமடைந்த செந்தில், சேகரை கையால் ஓங்கி தாக்கினார். காயமடைந்த சேகர், சீர்காழி போலீசில் புகார் செய்தார். சீர்காழி போலீசார், வழக்கு பதிந்து தேமுதிக  நகர செயலாளர் செந்திலை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து  அங்கு நிறுத்தி வைத்திருந்த 2 கார் கண்ணாடிகள் அடித்து  நொறுக்கப்பட்டது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: