×

சீட் தராததால் அப்செட் சித்து மனைவி சீற்றம்

பாஜவில் இருந்து காங்கிரசுக்கு தாவி, பஞ்சாப்பில் தற்போது அமைச்சராக இருப்பவர் முன்னாள் கிரிக்கெட் வீரர் நவ்ஜோத் சிங் சித்து. கணவர் எவ்வழியோ, மனைவியும்  அவ்வழி என்பது போல சித்துவின் மனைவி நவ்ஜோத் கவுர் சித்துவும் பாஜ.விலிருந்து விலகி, தற்போது காங்கிரஸ் எம்எல்ஏவாக உள்ளார். சித்துவை போல்   இவரும்அதிரடியாக பேசக்கூடியவர்்.இம்முறை மக்களவை தேர்தலில் சண்டிகர் தொகுதியில் போட்டியிட கவுர் சீட் கேட்டார். தனக்குதான் சீட் கிடைக்கும் என்ற நம்பிக்கையில், ஒன்றரை மாதத்திற்கு முன்பே  சண்டிகர் தொகுதியில் பிரசாரத்தையும் தொடங்கினார்.

இவரது நம்பிக்கையில் மண் விழுந்தது போல, சண்டிகர் தொகுதிக்கு மூத்த தலைவர் பவன் குமார் பன்சாலை வேட்பாளராக காங்கிரஸ் கட்சி அறிவித்தது. இதனால், கவுர்  செம அப்செட்டில் உள்ளார். ‘‘ரொம்ப அதிருப்தியில இருக்கீங்களா?’’ என செய்தியாளர்கள் அவரிடம் கேட்டதற்கு, ‘‘சண்டிகர் தொகுதியில் எனக்கு சீட் தரச் சொல்லி யாரும்  முன்மொழியவில்லை. யாரோட ஆதரவும் எனக்கில்லை. தனி ஆளாக, பெண்ணாக எனக்காக நானே போராடினேன். தனியொரு பெண்ணின் முயற்சிக்கு மதிப்பளித்து எனக்கு  சீட் தந்திருந்தால் சந்தோஷப்பட்டிருப்பேன். ம்கூம்... என்ன செய்வது? கட்சி மேலிடம் முடிவுக்கு கட்டுப்பட்டுதானே ஆக வேண்டும்’’ என்றார். ‘‘இனியும் சண்டிகரில் பிரசாரம்  செய்வீர்களா?’’ என கேட்டதற்கு, ‘‘வேட்பாளர் பன்சால் விரும்பினால் பிரசாரம் செய்வேன்.

அவருக்கு எனது முழு ஆதரவு உண்டு’’ என சற்று ஆவேசத்துடன் கூறிவிட்டு  சென்றார். சண்டிகர் தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள பன்சால் 4 முறை எம்பியாக இருந்தவர், முன்னாள் ரயில்வே அமைச்சரும் ஆவார். ஏற்கனவே, பல்வேறு  சர்ச்சைகளுக்கு சொந்தக்காரரான சித்துவை காங்கிரஸ் கட்சி ஒதுக்கி வைக்கும் நிலையில், அவரது மனைவிக்கும் சீட் தராதது குறிப்பிடத்தக்கது.




பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Abset Sid , Absette , Daughter,outraged
× RELATED காங்கிரஸ் எம்.பி.க்கள் எண்ணிக்கை 100-ஆக அதிகரிப்பு