×

விசாரணையின் போது தாக்கிய எஸ்.ஐ.,க்கு 25 ஆயிரம் அபராதம் : மனித உரிமை ஆணையம் உத்தரவு

சென்னை: விசாரணையின் போது கடுமையாக தாக்கிய எஸ்.ஐ.க்கு ₹25 ஆயிரம் அபராதம் விதித்து மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. கும்பகோணம் சாத்தங்குடியைச் சேர்ந்த கூலி தொழிலாளி திருநாவுக்கரசு (29) மாநில மனித உரிமை ஆணையத்தில் தாக்கல் செய்த மனுவில், ‘ 2015ல் லட்சுமி என்பவர்  காவல் நிலையத்தில் என் மீது பொய் புகார் கொடுத்தார்.

கும்பகோணம் எஸ்.ஐ. கார்த்தி என்னை விசாரித்தார். லத்தியால் கடுமையாக தாக்கினார். மனித உரிமை மீறலில் ஈடுபட்ட எஸ்.ஐ. கார்த்தி மீது உரிய நடவடிக்கை எடுக்க  வேண்டும்’ என கூறியிருந்தார்.இந்த மனு நீதிபதி துரை ஜெயச்சந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தது. ‘எஸ்.ஐ. கார்த்தி மனித உரிமை மீறலில் ஈடுபட்டது தெரிகிறது. இதற்காக அவருக்கு ₹25 ஆயிரம்  அபராதம் விதிக்கப்படுகிறது. மேலும், சப்-இன்ஸ்பெக்டர் மீது ஒழுங்கு நடவடிக்கையும் எடுக்க வேண்டும்’ என நீதிபதி உத்தரவிட்டார்.




பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : interrogation ,Human Rights Commission , Attacked,interrogation, SI , Human Rights Commission ,
× RELATED மாஜி அமைச்சர் ஜெயக்குமார் வழக்கை...