×

சிறுவன் மரணத்துக்கு காகம், கொசு காரணமா?: சோதனையில் அதிர்ச்சி

புதுடெல்லி: கேரளாவில் 6 வயது சிறுவனின் மரணத்துக்கு காரணமான வைரஸ் எங்கிருந்து பரவியது என்பதை கண்டறிய முடியாததால் மாநில சுகாதாரத் துறையினர்  கவலை அடைந்துள்ளனர்.
கேரளா மாநிலம், மலப்புரம் அருகேயுள்ள வென்னியூர் கிராமத்தில் 6 வயது சிறுவன் ஒருவன் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இறந்தான். அவன் ‘வெஸ்ட் நைல்  வைரஸ்’ என்ற வைரசால் பாதிக்கப்பட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இதையடுத்து, சிறுவனின் வென்னியூர் கிராமத்தில் இறந்து கிடந்த 4 காக்கைகள் மற்றும்  ெகாசுக்களிடம் பரிசோதனை நடத்தப்பட்டது.

இதில், அவற்றிடம் இந்த வைரஸ் இல்லை என்பது தெரிய வந்துள்ளது. இது பற்றி கேரள சுகாதாரத்துறை அதிகாரி  கூறுகையில், ‘‘இந்த வைரஸ் எப்படி வந்தது என குழப்பம் ஏற்பட்டுள்ளது. இருப்பினும்,  மேலும் கொசு மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளது.   கடலுண்டி பறவைகள் சரணாலயம் தீவிர கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டுள்ளது’’ என்றார்.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : death , The boy's, death, Cock, mosquito ,reason
× RELATED தொழிலாளி அடித்துக் கொலை: எஃப்.ஐ.ஆரில் மருத்துவமனையை சேர்க்க வலியுறுத்தல்