தேர்தல் விழிப்புணர்வு புத்தகம் வெளியீடு

சென்னை: தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் மாவட்ட தேர்தல் அதிகாரிகள், மாவட்ட கண்காணிப்பாளர்கள் கூட்டம் சென்னை, கிண்டியில் உள்ள கிராண்ட் சோழா  ஓட்டலில் நேற்று நடந்தது. முன்னதாக, இந்திய தேர்தல் ஆணையர்கள் அசோக்லவாசா, சுஷில் சந்திரா ஆகியோர் தமிழக வாக்காளர்களிடையே தேர்தல் மற்றும் வாக்குப்பதிவு தொடர்பான  விழிப்புணர்வுக்கு பயன்படுத்தப்படும் பொருட்கள் மூலம் அமைக்கப்பட்டிருந்த கண்காட்சியை தொடங்கி வைத்து பார்வையிட்டார்.

தொடர்ந்து, தமிழக வாக்காளர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் ெதாடர்பான புகைப்படங்கள் அடங்கிய புத்தகத்தையும் மற்றும் சமூக  ஊடகங்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்திய நடவடிக்கைகள் குறித்த புத்தகத்தையும் வெளியிட்டார்கள்.அப்போது, இந்திய முதுநிலை துணை தேர்தல் ஆணையர் உமேஷ் சின்ஹா, தமிழக தலைமை  தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு மற்றும் உயர் அதிகாரிகள்  உடனிருந்தனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

× RELATED பிஇ, பிடெக் தரவரிசைப் பட்டியல்...