×

துபாய் சம்பவம் உண்மையல்ல ரெக்கை கட்டி பறந்த தங்கக்கட்டி வதந்தி

துபாய்:  சமீபத்தில் துபாயில் ஒரு வீடியோ வெளியானது. அதில், துபாய் விமான நிலையத்தில் கண்ணாடி பெட்டிக்குள் தங்க கட்டி வைக்கப்பட்டிருந்ததாகவும்  அந்த பெட்டியில் கை உள்ளே செல்லும் அளவில் துளையிடப்பட்டு அந்த பெட்டியிலிருந்து தங்கத்தை எடுப்பவருக்கு அந்த தங்க கட்டி சொந்தமாகும் என கூறப்பட்டது.. அந்த வீடியோ காட்சியில் ஏராளமானோர் அதனை எடுக்க முயற்சித்து தோல்வியுறுவார். பலரில் ஒருவர் தங்கத்தை வெளியில் எடுத்து விடுவார்.இதனை வைத்து தங்கத்தை அவர் வென்று விட்டார் என்ற செய்தி சமூக வலைதளங்களில் வீடியோ  வைரலாக பரவி வருகிறது.இச்செய்தி வெறும் வதந்தி என இப்போது தெரிய வந்துள்ளது. முக்கியமாக,  இந்நிகழ்வு துபாய் விமான நிலையங்களில் நடைபெற வில்லை.    துருக்கி  இஸ்தான்புல்லை சேர்ந்த தங்கச் சுத்திகரிப்பு நிறுவனம் தங்களுடைய தயாரிப்பை விளம்பரபடுத்த இந்த நிகழ்ச்சியை நடத்தியுள்ளது. இதில், ஏராளமானோர் தங்க கட்டி எடுக்க முயற்சிக்கும் காட்சிதான் வீடியோவாக வெளியாகி இருக்கிறது.

மற்றொரு வீடியோவில் சவால் போட்டியில் 12.5 கிலோ தங்ககட்டியை ஒருவர் பெட்டியின் துளையிலிருந்து வெளியே எடுக்கிறார்.அவருக்கு தங்க கட்டி பரிசாக கிடைத்து விட்டதாக  ஒரு செய்தி. இந்த வீடியோ ஜப்பானில் நீகட்டா பகுதியில்  உள்ள‌ அருங்காட்சியகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியாகும் இந்த அருங்காட்சியகத்திற்கு ஆண்டுதோறும் 2 லட்சத்து 60 ஆயிரம் பேர் வருகை தருகிறார்கள். இதில் இந்த தங்க கட்டியை வெளியே எடுப்பவருக்கு 4500 யென் மதிப்புள்ள தங்க அட்டையை பரிசாக வழங்குவார்கள் என்று அங்குள்ள செய்திகள் தெரிவிக்கிறது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Dubai , Dubai, gold
× RELATED சர்வதேச மொபைல் எண்ணை பயன்படுத்தி...