×

பொன்னமராவதி பகுதியில் கடும் வறட்சியிலும் கோடை சாகுபடி மும்முரம்

பொன்னமராவதி: பொன்னமராவதி பகுதியில் கடும் வறட்சியிலும் ஒரு சில இடங்களில் கோடை நெல் நடவுப்பணி நடக்கின்றது. பொன்னமராவதி பகுதியில் மழையின்றி கடும் வறட்சி நிலவுகின்றது. ஒன்றியத்தில் உள்ள 1081 குளங்கள் தண்ணீரின்றி காய்ந்து கிடக்கின்றது. இதனால் எங்கு பார்த்தாலும் செடிகள், மரங்கள், புல்பூண்டு என அனைத்தும் காய்ந்து கிடக்கின்றது. ஆடு, மாடு மேய்க்க வழியின்றி தவிக்கின்றது. இப்பகுதி முழுக்க முழுக்க விவசாயத்தையே நம்பிய பகுதி.

மழையின்றி கிடப்பதால் விவசாயிகள் கடன் வாங்கி போர்வெல் போடுகின்றனர். போர்வெல் போடும் விவசாயிகளில் ஒரு சிலருக்கு மட்டுமே தண்ணீர் வருகின்றது. இந்த ஒரு சில விவசாயிகள் இப்போது கோடை நடவு செய்கின்றனர். தொடர்ந்து மழை பெய்யவில்லை என்றால் எந்த போர்வெல்லிலும் தண்ணீர் இருக்காது என விவசாயிக்ள ஆதங்கத்துடன் தெரிவிக்கின்றனர். கடந்த காலங்களில் 24 மணி நேரமும் மோட்டார் இயங்கியதால் தண்ணீர் தட்டுப்பாடு இன்றி விவசாயம் செய்து வந்தோம். தற்போது நாள் ஒன்றுக்கு 3 மணி நேரம் மட்டுமே மோட்டார் மூலம் எடுக்கும் அளவுக்கு மட்டுமே கிணற்றில் தண்ணீர் உள்ளது.

தண்ணீர் இல்லாததால் நடவு செய்து வருகிறோம். வயலில் தண்ணீர் பாய்ச்சினாலும், கடும் கோடை வெப்பம் காரணமாக எளிதில் தண்ணீர் ஆவியாகி விடுகிறது. வயல்களில் தண்ணீர் தேங்கி நின்றால்தான் பயிர்கள் செழிப்பாக வளரும். போதிய மழை இல்லாததால் பயிர்கள் வளர்ச்சி குறைவாக உள்ளது. வழக்கமாக மார்ச், ஏப்ரல் மாதங்களில் மழை பெய்யும். இந்த ஆண்டு இதுவரை மழை பெய்யவில்லை. கடந்த கோடை மழை கைக்கொடுக்கும் என்ற நம்பிக்கையில் நெல் பயிர்களை பயிரிட்டுள்ளோம். குறைந்த அளவு தண்ணீர் கிடைத்தாலும் விளைச்சல் வந்துவிடும் என விவசாயிக்ள ஆதங்கத்துடன் தெரிவிக்கின்றனர். 


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Summer cultivation ,area ,Ponnaravaradi , Ponnaravarathi, drought, summer, cultivation
× RELATED ராட்சத அலையில் சிக்கியவர் பலி