×

அண்ணன் என்னடா...? தம்பி என்னடா...? பீகாரில் முட்டி மோதும் லாலு குட்டீஸ்கள்

பீகார் மக்களவை தேர்தலில் இருமுனை போட்டி நடக்கிறது. ஒருபக்கம், பாஜ. - ஐக்கிய ஜனதா தளம் - லோக் ஜனசக்தி கூட்டணி. மறுபுறம், காங்கிரஸ் - ராஷ்டிரிய ஜனதா தளம் (ஆர்ஜேடி) கூட்டணி. இரு கூட்டணியும் மொத்தமுள்ள 40 மக்களவை தொகுதிகளையும் வளைத்து போடும் முயற்சியில் உள்ளன. இரு கூட்டணிக்கும் கடுமையான போட்டி நிலவிய நிலையில், காங்கிரஸ் - ஆர்ஜேடி கூட்டணியில் ஓட்டை விழுந்து விட்டது. ஆர்ஜேடி தலைவர் லாலு பிரசாத் யாதவின் மூத்த மகன் தேஜ் பிரதாப், இளைய மகன் தேஜஸ்வி யாதவ் இடையே ஏற்பட்டுள்ள மோதல்தான் இதற்கு காரணம்.

மாட்டுத் தீவன ஊழல் வழக்கில் லாலு சிறையில் காலம் தள்ளிக் கொண்டிருக்கும் நிலையில், தேஜஸ்வி வசம்தான் கட்சி கட்டுப்பாடு உள்ளது. இத்தேர்தலில் தனது ஆதரவாளர்கள் 2 பேருக்கு ெஜகனாபாத், சியோகர் தொகுதிகளை ஒதுக்கும்படி தேஜஸ்விடம் பிரதாப் கேட்டார். ஆனால், தம்பி அதை நிராகரித்து விட்டார். மேலும், தனது மனைவியிடம் இருந்து விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தில் பிரதாப் வழக்கு தொடர்ந்துள்ள நிலையில், அவருடைய மாமனாருக்கு சரண் தொகுதியில் போட்டியிட தேஜஸ்வி வாய்ப்பு கொடுத்துள்ளார். இதனால், அவமானத்தின் உச்சிக்கே சென்று விட்ட பிரதாப், ‘லாலு ராப்ரி மோர்ச்சா’ என்ற பெயரில் புதிய கட்சியை தொடங்குவதாக நேற்று முன்தினம் அறிவித்து விட்டார். இது, அண்ணன்- தம்பி மோதல் பாஜ கூட்டணிக்கு குஷியாகி விட்டது. ஆர்ஜேடி தேன் கூட்டில் கல்வீசி கலைக்கும் பின்னணி சதியில் காவிகளின் கைவண்ணமும் உள்ளதாக அரசியல் நோக்கர்கள் அடித்து சொல்கின்றனர். அண்ணன் - தம்பி இடையே சமாதானத்தை ஏற்படுத்த தாய் ரப்ரிதேவி முயற்சி செய்து வருகிறார். எது எப்படியோ, கலங்கிய குட்டையில் மீன் பிடிக்க தயாராகி விட்டது பாஜ கூட்டணி.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Brother ,Bihar ,Lalu Kuttiyes , Brother, brother, bihar, slap, lalu, and kuttis
× RELATED பீகார் தலைநகர் பாட்னாவில் ஓட்டலில் பயங்கர தீ விபத்து..!!