×

10 சிங்கப்பூர் போயாச்சு... இப்போ பாரீஸ், லண்டன் வந்தாச்சு...

டெல்லியில் உள்ள 7 மக்களவை தொகுதிகளையும் கைப்பற்ற ஆம் ஆத்மி கடும் முயற்சி மேற்கொண்டு வருகிறது. டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் 7 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்து தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். கடந்த வாரம் அவர் பிரசாரம் மேற்கொண்ட போது, டெல்லிக்கு முழு மாநில அந்தஸ்து கிடைத்தால் 10 சிங்கப்பூரை டெல்லியில் உருவாக்குவேன் என்றார். இப்போது டெல்லியில் உள்ள 7 சீட்டுகளும் ஆம் ஆத்மிக்கு கிடைத்தால் பாரீஸ், லண்டனைப்போல் டெல்லி அழகாகும் என்றார்.

டெல்லி கன்டோன்மென்ட் பகுதியில் நடந்த தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு ஆவேசம் பொங்க கெஜ்ரிவால் பேசியதாவது: டெல்லியில் உள்ள 3 மாநகராட்சிகளும் தற்போது பா.ஜ வசம்தான் உள்ளன. ஆனால் டெல்லி எப்படி இருக்கிறது? டெல்லியை அவர்கள் புறக்கணித்து விட்டார்கள். அதனால்தான் இன்று டெல்லி முழுவதும் குப்பை கிடங்காக காட்சியளிக்கிறது. இங்கிருக்கும் பெரும்பாலோனோர் வௌிநாட்டிற்கு சென்று வந்திருப்பீர்கள். அங்குள்ள தலைநகரம் எப்படி இருக்கிறது? டெல்லி எப்படி இருக்கிறது? பாரீஸ், லண்டன், வாஷிங்டன், டோக்கியோ உள்ளிட்ட நகரங்களை பாருங்கள். அதே போல் டெல்லியை நாம் அழகாக மாற்ற வேண்டாமா? அதே போல் குப்பைகள் இல்லா டெல்லியை கொண்டு வர ஆம் ஆத்மியால் முடியும். டெல்லி முழு மாநில அந்தஸ்து பெற்றால், டெல்லியில் உள்ள 7 சீட்டுகளையும் நாம் வென்றால், டெல்லியை சுத்தப்படுத்துவோம். உங்களை பெருமைப்படுத்துவோம் என்றார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Singapore Poya ,Visit ,Paris ,London , Singapore, Paris, London
× RELATED இன்னும் 100 நாட்கள்!: பாரிஸ் ஒலிம்பிக்...