×

தர்மபுரி தொகுதியில் அன்புமணியை வீழ்த்த வியூகம்: வன்னியர் அமைப்புகள், அரசியல் கட்சிகள் தனித்தனியாக ஆலோசனை

சென்னை: தர்மபுரி தொகுதியில் போட்டியிடும் அன்புமணியை வீழ்த்த வன்னியர் அமைப்புகள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகள் தனித்தனியாக ஆலோசனை நடத்தி வருகிறது. தர்மபுரி தொகுதியில், அதிமுக கூட்டணி சார்பில் அன்புமணியும், திமுக சார்பில் செந்தில்குமார், அமமுக சார்பில் பழனியப்பன் ஆகியோர் போட்டியிடுகின்றனர். இறுதிவரை திமுக கூட்டணியில் சேருவதாக பாமக கூறி வந்தது. அதேபோல் அதிமுகவுடனும் ரகசியமாக பேச்சுவார்த்தை நடத்தி வந்தது. பிறகு திடீரென அதிமுகவுடன் கூட்டணி அமைத்துக்கொண்டது. இதனால் தொகுதியில் அன்புமணியை தோற்கடிக்கச்செய்ய வேண்டும் என்பதில் திமுக தீவிரமாக உள்ளது. அதேபோல பல்வேறு வன்னியர் இயக்கங்கள் குரு மறைவுக்கு பிறகு, பாமகவுக்கு எதிராக திரும்பி உள்ளன. குறிப்பாக வன்னியர்களின் டிரஸ்ட் சொத்துக்கள் பறிப்பு, தனித்தன்மை இழந்து அதிமுகவுடன் கூட்டணி வைத்தது.

வன்னியர்களின் நலனை புறக்கணித்து குடும்ப நலனை முன்னிறுத்தியது போன்றவற்றை அவர்கள் கடுமையாக எதிர்கின்றனர். எனவே, பாமக போட்டியிடும் தொகுதிகளில் அவர்கள் ராமதாசுக்கு எதிராக பிரசாரம் செய்து வருகின்றனர். குறிப்பாக அவரது மகன் அன்புமணி போட்டியிடும் தொகுதியில் முகாமிட்டு அவருக்கு எதிராக முக்கிய சமுதாய தலைவர்களை சந்தித்து பேசி வருகின்றனர். இதற்காக காடுவெட்டி குருவின் உறவினர்கள், வாழ்வுரிமைக்கட்சிதலைவர் வேல்முருகன் ஆகியோரை வைத்து அன்புமணிக்கு எதிராக பிரசாரம் செய்யும் திட்டத்தையும் வைத்துள்ளனர். அதேபோல் அமமுகவும் இத்தொகுதியில் வெற்றிபெற வேண்டும் என்பதற்காக தீவிரமாக பிரசாரம் செய்து வருகிறது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : constituency ,organizations ,Dhammapuri ,Vanniar ,parties , anbumani, Dharmapuri constituency, Vanniar, political party
× RELATED நீலகிரி தொகுதி வாக்கு எண்ணிக்கை...