ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கு ரூ.100 கோடி: அதிமுக மீது மதிமுக பகீர் குற்றச்சாட்டு

சென்னை: ஒவ்வொரு நாடாளுமன்ற தொகுதிக்கும் ரூ.100 கோடி விநியோகிக்க அதிமுக திட்டமிட்டுள்ளதாக வைகோ தெரிவித்தார். சென்னை வந்தார். விமான நிலையத்தில் நிருபர்களுக்கு அவர் அளித்த பேட்டி: தமிழகம் முழுவதும் திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு ஆதரவு அலை வீசுகிறது. எனவே, பாஜக தயவால் இயங்கும்  அதிமுகவுக்கு அச்சம் வந்துவிட்டது. அதனால் தற்போது சிபிஐ, அமலாக்கத்துறை, வருமானவரித்துறை ஆகியவற்றை அவர்கள் பாரபட்சமாகவே பயன்படுத்துகின்றனர். ஆயிரக்கணக்கான கோடி ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளான அமைச்சர்கள் இருக்கிறார்கள். முதலமைச்சர் உட்பட அனைத்து அமைச்சர்கள் மீதும் குற்றச்சாட்டு உள்ளது. அவர்கள் ஒவ்வொரு தொகுதியிலும் ரூ.50 கோடி முதல் ரூ.100 கோடி வரை சேர்த்துவிட்டனர்.

தேர்தலுக்காக அவர்கள் பண விநியோகம் செய்யப்போகிறார்கள் என்று மக்கள் பட்டவர்த்தனமாகவே பேசுகின்றனர். ஆனால், இந்த சோதனை நடத்துபவர்கள் அங்கெல்லாம் எந்த ஆய்வும் சோதனையும் நடத்தவில்லை. திமுகவை அச்சுறுத்துவதற்கும் மிரட்டுவதற்கும் இதேபோன்ற சோதனை முயற்சியில் ஈடுபடுகின்றனர். அவர்களின் அந்த முயற்சி வெற்றிபெறாது. இந்த சோதனை விவகாரம் ஒருதலைப்பட்சமான நடவடிக்கையாக இருக்கிறது. இந்த சோதனையில் என்ன நடக்கிறது என்ற உண்மை விவரம் எதுவும் இதுவரை அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவிலை. இதேபோன்ற பூச்சாண்டி வேலைகளுக்கெல்லாம் திமுகவும் பயப்படாது திமுக கூட்டணியும் அஞ்சாது. இவ்வாறு அவர் கூறினர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : constituency ,AIADMK ,Accused Bhagir , parliamentary constituency
× RELATED எல்ஐசி தாராளம் கிரெடிட் கார்டுக்கு கட்டணம் கிடையாது