×

கொளத்தூர், பெரம்பூர் தொகுதிகளில் வாகன சோதனையில் ரூ.4.78 லட்சம் பறிமுதல்

பெரம்பூர்: கொளத்தூர் தொகுதிக்கு உட்பட்ட ரெட்டேரி சந்திப்பில் நேற்று முன்தினம் இரவு தேர்தல் கண்காணிப்பு குழு அதிகாரி பொன்னுரங்கம் தலைமையில் வாகன சோதனை நடத்தப்பட்டது. அப்போது அவ்வழியாக பைக்கில் வந்தவரை மடக்கி சோதனை நடத்தினர். அவரிடம் ரூ.1.91 லட்சம் இருந்தது தெரியவந்தது. விசாரணையில், அவரது பெயர் ராஜா என்பதும், அவர் கொண்டு வந்த பணத்திற்கு உரிய ஆவணங்கள் இல்லை என்பதும் தெரிந்தது. இதனால், அந்த பணம் பறிமுதல் செய்யப்பட்டு பெரம்பூர் கருவூலக அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது. இதேபோல், பெரம்பூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கொடுங்கையூர் ஆர்.ஆர்.நகர் சந்திப்பில் தேர்தல் பறக்கும் படை அதிகாரி பாஸ்கர் தலைமையில் வாகன சோதனை நடந்தது. அப்போது அவ்வழியாக பைக்கில் வந்தவரை மடக்கி சோதனை நடத்தினர். அவரிடம் ரூ.53,700 இருந்தது தெரியவந்தது. விசாரணையில் புளியந்தோப்பு சாஸ்திரிநகர் பகுதியை ஜெய்சங்கர் (43) என்பதும், கடைகளுக்கு சிகரெட் வியாபாரம் செய்து வருவதும் தெரியவந்தது. அவரிடம், அந்த பணத்துக்கான உரிய ஆவணம் இல்லாததால், அதை பறிமுதல் செய்து பெரம்பூர் கருவூல அலுவலகத்தில் ஒப்படைத்தனர். நேற்று காலை கொளத்தூர் தொகுதிக்கு உட்பட்ட ரெட்டேரி சந்திப்பில் தேர்தல் பறக்கும்படை அதிகாரி, ராமதுரை தலைமையில் வாகன சோதனை நடத்தப்பட்டது. அப்போது அந்த வழியாக வந்த இருசக்கர வாகனத்தை சோதனை செய்தபோது, அதில் ரூ.2லட்சத்து 35 ஆயிரம் இருப்பது தெரிந்தது. விசாணையில், அவர் கொளத்தூர் பகுதியை சேர்ந்த பிரபு என்பதும், இருசக்கர உதிரி பாகங்கள் விற்பனை செய்து வருபவர் என்பதும் தெரிந்தது. ஆனால், அந்த பணத்திற்கு உரிய ஆவணம் இல்லாததால் அதிகாரிகள் பணத்தை பறிமுதல் செய்து பெரம்பூர் கருவூலத்தில் ஒப்படைத்தனர்….

The post கொளத்தூர், பெரம்பூர் தொகுதிகளில் வாகன சோதனையில் ரூ.4.78 லட்சம் பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : Kolathur ,Perambur ,Ponnurangam ,Retteri ,
× RELATED செங்கல்பட்டு அருகே அறுவடை செய்ய நெல்...