×

பனி பிரதேசமான பாலைவனம் வெள்ளை மழையில் நனைந்த சவுதி

துபாய்: உலகம் முழுவதும் பருவநிலை மாறி வருகிறது. வெப்ப நிலை அதிகமுள்ள பகுதிகளில் மழையும், பனி பொழிவும் அதிகரித்து வருகிறது. அதன் மாற்றம் பாலைவன பூமியான துபாயிலும் தெரிகிறது. பாலைவனம் நிறைந்த சவுதி அரேபியாவில் பனிமழை பொழிந்து அரேபியா அலாஸ்காவாக காட்சியளிக்க ஆரம்பித்துள்ளது. சவுதி அரேபியாவின் வடகிழக்கு பகுதியில் சமீபகாலமாக கடும் பனி மழை பொழிந்து வருகிறது.

இதனால் அப்பகுதியில் மலைகள் வெள்ளை பூக்களால் போர்த்தப்பட்டது போன்று ஐஸ் கட்சிகளால் மூடப்பட்டிருந்தது. ஜோர்டான் நாட்டு எல்லையை ஒட்டியுள்ள தபுக் மாகாணத்தின் ஜபல் அல் லாஸ் பகுதியில் பனியின் தாக்கம்  அதிகமிருக்கிறது.  சாலையெங்கும் பனி கட்டிகளால் நிறைந்து பாலைவன பிரதேசம் பனி பிரதேசமாக காட்சியளித்தது. அப்பகுதி மக்களை மிகுந்த உற்சாக பட வைத்ததுடன் சிறுவர் சிறுமியர் பனிகட்டிகளை எடுத்து  விளையாடினர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : wetland , Ice Desert, Saudis, white ,rain
× RELATED தமிழ்நாட்டில் ஈரநில பறவைகள் குறித்த மதிப்பீடு!