×

பாவூர்சத்திரத்தில் ரயில்வே மேம்பாலம் அமைப்பேன்: தென்காசி தொகுதி திமுக வேட்பாளர் தனுஷ்குமார் உறுதி

பாவூர்சத்திரம்: கீழப்பாவூர் மேற்கு ஒன்றியத்தில் தென்காசி திமுக வேட்பாளர் தனுஷ்குமார் இன்று கிராமம், கிராமமாக சென்று ஓட்டு சேகரித்தார். வழிநெடுகிலும் பொதுமக்கள் அவருக்கு உற்சாக வரவேற்பளித்தனர். தென்காசி மக்களவை தொகுதி திமுக வேட்பாளர் தனுஷ்குமார் இன்று காலை 7 மணிக்கு கீழப்பாவூர் மேற்கு ஒன்றியத்தில் உள்ள வேட்டைக்காரன்குளத்தில் பிரசாரத்தை தொடங்கினார். இராமலிங்கபுரம், மேல மெஞ்ஞானபுரம், மூலச்சிகுளம், அருந்ததியர்புரம், புல்லுக்காட்டுவலசை, முப்புலியூர், திரவியநகர், வெள்ளப் பனையேறிபட்டி, மேலஅரியப்பபுரம் கீழ அரியப்பபுரம், ரகுமானியபுரம், சிவசைலனூர், பொடியனூர், ஆவுடையானூர், மாடியனூர், சின்னநாடானூர், மருதடியூர், கொண்டலூர், திப்பணம்பட்டி, நாட்டார்பட்டி, சென்னல்தாபுதுக்குளம், பூவனூர், ஐயனூர், சிவநாடானூர், திருமலாபுரம், மடத்தூர் உள்ளிட்ட கிராமங்களில் பிரசாரம் செய்தார்.பிரசாரத்தின்போது வேட்பாளர் தனுஷ்குமார் பேசியதாவது:- விவசாயிகளின் பிரச்னைகளை  தீர்க்க உரிய நடவடிக்கை எடுப்பேன். மத்திய மற்றும் மாநிலத்தில் உள்ள ஜாதி,  மத உணர்வு உள்ள அரசுகள் அகற்றப்பட வேண்டும். பாவூர்சத்திரத்தில் ரயில்வே  மேம்பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

குற்றாலத்தை மத்திய சுற்றுலா  வரைபடத்தில் இணைக்க நடவடிக்கை எடுக்கப்படும். ஜம்புநதி மேல்மட்ட கால்வாய்  அமைக்க குரல் கொடுப்பேன். தென்காசி தொகுதியைச் சேர்ந்தவர்கள் எப்போது  வேண்டுமானாலும் என்னை சந்திக்கலாம். 5 ஆண்டுகளில் தொகுதியில் பாராளுமன்ற  உறுப்பினரை பார்க்க முடியவில்லை என்ற நிலை நிச்சயம் இருக்காது. பொதிகை  எக்ஸ்பிரஸ் ரயிலில் உள்ள பிரியம் தக்கல் முறை அகற்ற நடவடிக்கை எடுப்பேன்.  பாவூர்சத்திரம் பகுதி விவசாயிகளின் விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்கும்  வகையில் அவர்களிடம் ஆலோசனை கேட்டு நடவடிக்கை மேற்கொள்வேன் என்றார். வேட்பாளருடன் தொகுதி பொறுப்பாளர் கருப்பசாமிபாண்டியன், மேற்கு மாவட்ட செயலாளர் வக்கீல் சிவ பத்மநாதன், கீழப்பாவூர் ஒன்றிய செயலாளர் ஜெயபாலன், காங்கிரஸ் கட்சி பால்துரை, முஸ்லிம் லீக் தலைமை நிலைய பேச்சாளர் முகமது அலி, முகமது முஸ்தபா உட்பட பலர் உடன் சென்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : DMK ,candidate ,constituency ,Tenkasi ,Dhanushkumar , Pavurtharatri, Railway flyover, Thenka, Dhanushkumar
× RELATED திமுக வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டம்