×

எல்சால்வேடர், ஹோண்டுராஸ் கவுதமலா ஆகிய நாடுகளுக்கு அமெரிக்காவால் வழங்கப்பட்டு வந்த நிதி உதவி நிறுத்தம்: அதிபர் டிரம்ப்

வாஷிங்டன்: மெக்சிகோ வழியாக எல்சால்வேடர், கவுதமலா, ஹோண்டுராஸ் உள்ளிட்ட மத்திய அமெரிக்க நாடுகளில் இருந்து மக்கள் சட்ட விரோதமாக அமெரிக்காவுக்குள் நுழைந்து அடைக்கலம் கோருகின்றனர். அதை தடுத்து நிறுத்தும் நடவடிக்கையில் அமெரிக்க அதிபர் டிரம்ப் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். மெக்சிகோ எல்லையில் தடுப்பு சுவர் கட்ட நடவடிக்கை எடுத்துள்ளார். எல்சால்வேடர் உள்ளிட்ட மத்திய அமெரிக்க நாடுகளில் இருந்து சட்டவிரோதமாக பலர் நுழைவதால் மெக்சிகோ எல்லையை மூடப்போவதாக டிரம்ப் சமீபத்தில் மிரட்டல் விடுத்து இருந்தார். இந்த நிலையில் எல்சால்வேடர், ஹோண்டுராஸ் கவுதமலா ஆகிய நாடுகளுக்கு அமெரிக்காவால் வழங்கப்பட்டு வந்த நிதி உதவி நிறுத்தப்பட்டுள்ளது.

இந்த நாடுகள் தங்களது குடிமக்களை கேரவன்களில் ஏற்றி வந்து மெக்சிகோ எல்லையில் இறக்கி விட்டு செல்கின்றனர். அமெரிக்க மக்களுக்கு பல்வேறு இடையூறுகளை செய்து வருகின்றனர் என டிரம்ப் ஏற்கனவே குற்றம் சாட்டி இருந்தார். இந்த நிலையில் அந்த நாடுகளுக்கு வழங்கப்பட்டு வந்த நிதி உதவி நிறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து அமெரிக்க அரசின் செய்தி தொடர்பாளர் கூறும்போது, அதிபர் டிரம்பின் வழிகாட்டுதலின் பேரில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. எம்.பி.க்கள் மற்றும் பாராளுமன்றத்தின் ஒப்புதல் பெற்று இந்த 3 நாடுகளுக்கு வழங்கப்படும 700 மில்லியன் டாலர் நிதி உதவி முற்றிலும் நிறுத்தப்படும் என்றார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : US ,Trump ,Elsalverter ,Honduras Gautamala , US aid ,Elsalverter,Honduras Gautamala,US aid, Chancellor Trump
× RELATED அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப்புக்கு ரூ7.50 லட்சம் அபராதம்