×

எல்லையில் இந்திய ராணுவம் பதிலடி தாக்குதல் : 3 பாக்., ராணுவ வீரர்கள் பலி..!

ஜம்மு: ஜம்மு - காஷ்மீரின் பூஞ்ச் பகுதியில் நேற்று பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் 5 வயது சிறுமி பலியானார். மேலும் 5 பிஎஸ்எஃப் வீரர்கள் மற்றும் பொதுமக்களில் இருவர் படுகாயம் அடைந்தனர். இதில் சிகிச்சை பலனின்றி ஒரு வீரர் உயிரிழந்தார். இந்நிலையில் பாகிஸ்தான் அத்துமீறலுக்கு இந்திய வீரர்கள் நடத்திய பதில் தாக்குதலில், அந்நாட்டு ராணுவ வீரர்கள் 3 பேர் கொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

காஷ்மீரில் கடந்த பிப். 14ம் தேதி சிஆர்பிஎப் வீரர்கள் சென்ற பேருந்து மீது வெடிகுண்டு நிரப்பிய வாகனத்தை மோதி தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர், இதில் 40 வீரர்கள் இறந்தனர். இந்த தாக்குதல் சம்பவத்துக்கு ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றது. இதனை தொடர்ந்து அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது. இதனை தொடர்ந்து பிப். 26ம் தேதி அதிகாலை இந்திய விமானப்படை போர் விமானங்கள், பாகிஸ்தானின் பாலகோட்டில் உள்ள ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத முகாம் மீது குண்டுவீசி தாக்குதல் நடத்தியது. இதில் 350 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக இந்திய அரசு கூறியது. இந்தியா விமானப்படை தாக்குதல் நடத்திவில்லை என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் மறுப்பு தெரிவித்தார். இத்தகைய சம்பவங்களால், இந்தியா–பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வருகிறது.

பாகிஸ்தான் ராணுவம் அவப்போது இந்திய நிலைகளை குறிவைத்தும், எல்லையோர கிராமங்களை குறிவைத்தும் தாக்குதல் நடத்துவதை வாடிக்கையாக வைத்துள்ளது.பாகிஸ்தானின் பாலக்கோட்டில் தீவிரவாத முகாமை இந்திய விமானப் படை தாக்கி அழித்ததன் பிறகு, இந்த அத்துமீறல் அதிகரித்துள்ளது. நேற்று பாகிஸ்தான் ராணுவம் நடத்திய அத்துமீறிய தாக்குதலில், பூஞ்ச் மாவட்டத்தில் எல்லைப் பாதுகாப்பு படையை சேர்ந்த வீரர் ஒருவரும், எல்லையோர கிராமத்தில் வசித்து வந்த 5 வயது சிறுமி ஒருவரும் உயிரிழந்தனர்.இதற்கு இந்திய தரப்பில் கடும் பதிலடி கொடுக்கப்பட்டது. இந்த தாக்குதலில் பாகிஸ்தான் வீரர்கள் 3 பேர் உயிரிழந்திருப்பதாக அந்நாட்டு ராணுவத்தின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.இந்தியா நடத்திய பதிலடி தாக்குதலில் பாகிஸ்தான் ராணுவ தரப்பில் உயிரிழப்புகளும், சேதமும் அதிகமாக இருக்கும் என்றும், ஆனால் பாகிஸ்தான் தரப்பு உண்மையை மறைப்பதாகவும் இந்திய ராணுவ வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : army ,Indian ,attackers ,soldiers , Pakistani Army, Indian soldiers, firing
× RELATED காஸா துப்பாக்கிச் சூட்டில் இந்திய அதிகாரி பலி