×

ரோஜா பூங்கா புல் மைதானம் சீரமைக்கும் பணி மும்முரம்

ஊட்டி: கோடை சீசனை முன்னிட்டு ரோஜா பூங்காவில் புல் மைதானம் சீரமைக்கும் பணிகள் துரித கதியில் நடந்து வருகிறது. ஆண்டுதோறும் கோடை காலத்தில் வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் ஊட்டிக்கு வருவது வழக்கமாக உள்ளது. இச்சமயங்களில் இங்கு வரும் சுற்றுலா பயணிகளை கவர பல்வேறு நிகழ்ச்சிகள், கண்காட்சிகள் நடத்தப்படுகிறது. தாவரவியல் பூங்காவில் மலர் கண்காட்சி மற்றும் ரோஜா பூங்காவில், ரோஜா காட்சி நடத்தப்படுகிறது. ரோஜா கண்காட்சிக்காக தற்போது பூங்காவை தயார் செய்யும் பணிகள் நடந்து வருகிறது.

ரோஜா செடிகள் கவாத்து செய்யப்பட்டு, இயற்கை உரமிடும் பணிகள் துரித கதியில் நடந்து வருகிறது. அதேபோல், பூங்காவில் உள்ள புல் மைதானத்தை சீரமைக்கும் பணி நடந்து வருகிறது. மேலும் பூங்காவில் உள்ள பெரிய புல் மைதானத்தில் உரம் கலந்த புதிய மண் தூவும் பணிகள் நடந்து வருகிறது. இப்பணிகள் முடிந்தவுடன் புற்களுக்கு தண்ணீர் பாய்ச்சப்பட்டு வளர்க்கப்படும். இச்சமயங்களில் பூங்கா புல் மைதானத்திற்குள் சுற்றுலா பயணிகள் செல்ல அனுமதிக்கப்படமாட்டாது. மே மாதம் துவக்கத்தில் ரோஜா கண்காட்சி நடத்தப்படும் நிலையில், தற்போது பூங்காவை மேம்படுத்தும் பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : stadium , Ooty, rose park, grass stadium,Tourists
× RELATED கொரோனா தடுப்பு பணியில் தீவிரம்...