×

எதிர்க்கும் மாநிலங்களில் நீட் தேர்வு ரத்து செய்யப்பட்டு மாற்றாக மாநில அளவில் தேர்வு நடத்தப்படும் : காங். தேர்தல் அறிக்கையில் குறிப்பீடு

புதுடெல்லி: வரும் மக்களவைத் தேர்தலுக்கான காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையை கட்சி தலைமை அலுவலகத்தில் வெளியிடப்பட்டது. தேர்தல் ஆணையம் கடந்த மாதம் 10ம் தேதி, மக்களவைத் தேர்தல் தேதிகளை அறிவித்தது. இதையடுத்து பல கட்சிகள் தங்களது தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளன. இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையை சோனியா காந்தி, ராகுல் காந்தி, மன்மோகன் காந்தி உள்ளிட்டோர் வெளியிட்டனர். தேர்தல் அறிக்கை வெளியிடும் நிகழ்ச்சியில், காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி, மூத்த தலைவர் சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், மூத்த தலைவர் ஏ.கே.அந்தோணி, முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம் பங்கேற்றுள்ளனர்.

முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் அமைக்கப்பட்ட தேர்தல் குழு அறிக்கையை தயார் செய்துள்ளது. ப.சிதம்பரம் தலைமையிலான் தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழுவின் கீழ் 20 துணை குழுக்கள் பணியாற்றி உள்ளன.

ப.சிதம்பரம் உரை

இந்த நிகழ்ச்சியில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், காங். தேர்தல் அறிக்கை விவசாயிகள், மாணவர்கள், பெண்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் என்றும் லட்சக்கணக்கான மக்களின் கருத்துகளை வைத்து காங். தேர்தல் அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது என்றும் கூறினார். மேலும் அவர் கூறியதாவது,4.70 கோடி வேலைவாய்ப்புகளை இழந்துள்ளோம்; வேலைவாய்ப்பு பெரிய பிரச்சினையாகியுள்ளது; விவசாயிகள் பிரச்சனை, பெண்கள் பாதுகாப்பு ஆகியவை அடுத்தடுத்த பிரச்சனையாக உள்ளது. நாட்டு மக்கள் எதிர்கொள்ளும் உண்மையான பிரச்சினைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது,என்று கூறினார்.

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்

இதன்பின் நிகழ்ச்சியில் பேசிய முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், சுயமரியாதையுடன் மக்கள் வாழ்வதற்கு ஏற்ற திட்டங்கள் அடங்கிய தேர்தல் அறிக்கையை காங்கிரஸ் வெளியிடுகிறது; காங்கரஸ் தேர்தல் அறிக்கை நாடு முழுவதும் விவாதப் பொருளாக அமையும்; பொருளாதாரம் விரைவாக வளர்வதற்கான தேவையான திட்டங்கள் தேர்தல் அறிக்கையில் உள்ளது; உற்பத்திப் பெருக்கமும் செல்வ வளம் பெருகுவதும் ஒன்றோடு ஒன்று இணைந்து செல்ல வேண்டும்; பொருளாதார வளர்ச்சியைப் பெருக்குவதன் மூலம் தான் பல கோடி விவசாயிகளின் தேவைகளை நிறைவேற்ற முடியும்என்று கூறினார்.

தேர்தல் அறிக்கை வெளியீடு

காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டது. லோக்சபா தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை ராகுல் காந்தி வெளியிட்டார்.

*ஓராண்டாக தேர்தல் அறிக்கை தயாரிக்கும் பணி நடைபெற்றது

*மக்களின் கருத்தை கேட்டு அறிந்து தேர்தல் அறிக்கை தயாரிக்க கூறியிருந்தேன்

*ஒரு பொய் கூட தேர்தல் அறிக்கையில் இருக்க கூடாது என்றும் அறிவுறுத்தினேன்

*தினமும் பிரதமர் பல பொய்களை பேசி வருகிறார், நாங்களும் பொய் சொல்ல விரும்பவில்லை

*5 பெரிய திட்டங்களை கொண்டு காங். தேர்தல் அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது

*நியாய் (NYAY திட்டத்தின் கீழ் ஏழைக்குடும்பங்களுக்கு  மாதந்தோறும் ரூ. 6000.  இந்த தொகையானது குடும்ப தலைவிகளின் வங்கி கணக்கில் செலுத்தப்படும்.

*2030க்குள் நாட்டில் இருந்து வறுமை முழுமையாக நீக்கப்படும்

*விவசாயத்திற்கென தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்படும்

*100 நாள் வேலைவாய்ப்பு திட்டம் 150 நாட்களாக உயர்த்தப்படும்

*தீவிரவாதத்தை முழுமையாக ஒழிக்க நடவடிக்கை எடுக்கப்படும்

*இளைஞர்கள் தொழில் தொடங்கும் போது 3 ஆண்டுகளுக்கு லைசென்ஸ் பெற தேவையில்லை

*மத்திய அரசின் பல்வேறு துறைகளில் உள்ள 22 லட்சம் காலி பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும்

*விவசாயிகள்  அவர்கள் வாங்கிய கடனை திரும்ப செலுத்தவில்லை என்றால் அது கிரிமினல் குற்றமாக கருதப்படாது.

*நீட் தேர்வை எதிர்க்கும் மாநிலங்களில் நீட் தேர்வு ரத்து செய்யப்படும்

*தமிழகத்தில் நீட் தேர்வு ரத்து. தமிழகத்தில் மட்டுமில்லை எந்தெந்த மாநிலங்களில் நீட் தேர்வு எதிர்க்கப்படுகிறதோ அந்த மாநிலங்களில் நீட் தேர்வு முழுமையாக ரத்து செய்யப்படும். அதற்கு மாற்றாக மாநில அளவில் தேர்தல் நடத்தப்படும்.

*ஜிஎஸ்டி வரம்புக்குள் பெட்ரோல்,டீசல் விலை கொண்டு வரப்படும்.

*புதுச்சேரிக்கு முழு மாநில அந்தஸ்து வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்

*தென் இந்தியா மக்களுடன் நாங்கள் உள்ளோம் என காண்பிக்கவே வயநாட்டில் போட்டியிட உள்ளேன்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : states ,examination ,NEAT , Lok Sabha, Election, Report, Manmohan Singh, Poverty, NeeT
× RELATED இஸ்ரேல் மீது ட்ரோன், ஏவுகணை தாக்குதலை தொடங்கியது ஈரான்