×

பெண்கள் பற்றி சர்ச்சை கருத்து கூறிய விவகாரம் : இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் ஹார்திக் பாண்டியா, கே.எல்.ராகுலுக்கு நோட்டீஸ்

மும்பை: பெண்கள் பற்றி சர்ச்சை கருத்து கூறிய விவகாரத்தில் இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் ஹார்திக் பாண்டியா மற்றும் கே.எல்.ராகுலுக்கு விசாரணை அதிகாரி டி.கே.ஜெயின் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

பெண்கள் பற்றி சர்ச்சை கருத்து கூறிய விவகாரம்

காபி வித் கரண் எனும் நிகழ்ச்சியை பிரபல பாலிவுட் இயக்குனர் கரண் ஜோகர் தொகுத்து வழங்கி வருகிறார். இந்த நிகழ்ச்சியில் பல்வேறு திரை பிரபலங்கள், கலைஞர்கள் பங்கேற்றுள்ளனர். அந்த வகையில் இந்த நிகழ்ச்சியில் இந்திய கிரிக்கெட் வீரர்கள் ஹார்திக் பாண்டியாவும், கே.எல்.ராகுலும் கலந்துகொண்ட நிகழ்ச்சி ஒளிப்பரப்பானது. இந்நிகழ்ச்சியில் பெண்கள் குறித்து சர்ச்சையான கருத்துக்களை இருவரும் பேசினர். பெண்களின் வாழ்க்கை முறை மற்றும் இனவெறியைத் தூண்டுதல் உள்ளிட்டவை குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பதிலளித்தனர்.

கிரிக்கெட் போட்டிகளில் தடை விதிப்பும் நீக்கமும்


இதனால், அவர்கள் இருவரும் கடுமையான விமர்சனங்களுக்கு ஆளாகினர். இதனை அடுத்து, தனது தவறுக்கு ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா மற்றும் கே.எல். ராகுல் ஆகியோர் மன்னிப்பு கேட்டனர்.
ஆனாலும் சர்ச்சைக்குரிய பேச்சை பேசிய இந்திய அணி வீரர்கள் ஹர்திக் பாண்டியா, கே.எல்.ராகுல் ஆகியோருக்கு கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்க பிசிசிஐ தடை விதித்தது. இதனிடையே உலகக் கோப்பை போட்டிகளை கருத்தில் கொண்டு பாண்டியா, ராகுல் மீதான தடையை நீக்க வேண்டும் என பிசிசிஐ நிர்வாகக்குழுவுக்கு பொறுப்புத் தலைவர் சி.கே.கண்ணா வலியுறுத்தினார்.

இருவருக்கும் நோட்டீஸ்

இதன் பின்னர் பாண்டியா மற்றும் கே.எல்.ராகுல் ஆகியோர் மீது விதிக்கப்பட்ட தடையை நீக்கி பிசிசிஐ உத்தரவிட்டது. இதற்கிடையில் இருவர் மீதான புகார் குறித்து விசாரிக்க முன்னாள் நீதிபதி டி.கே.ஜெயினை உச்சநீதிமன்றம் நியமித்தது. இந்நிலையில் அவர் கிரிக்கெட் அணி வீரர்கள் ஹார்திக் பாண்டியா மற்றும் கே.எல்.ராகுலுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அதில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி கூறியுள்ளார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Indian ,cricket team players ,Harithi Pandya ,KL Rao , Cricket, Hardy Pandia, K.L.Rahul, BCCI, Notices, TKJain
× RELATED கடும் வெயில் காரணமாக தமிழகத்துக்கு...