திருவனந்தபுரம்: காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்னும் அமுல்பேபியாக இருப்பதாக கேரள முன்னாள் முதல்வர் அச்சுதானந்தன் தெரிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி உத்தரப்பிரதேச மாநிலம் அமேதி நாடாளுமன்ற தொகுதியை தொடர்ந்து கேரள மாநிலம் வயநாடு தொகுதியில் போட்டியிடுகிறார். இதற்கு கேரள முதல்வர் பினராயி விஜயன், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வயநாடு மக்களவை தொகுதியில் போட்டியிடுவது ஆச்சியம் இல்லை என்றும் ராகுல் காந்தி பாரதிய ஜனதா கட்சியை எதிர்த்து போட்டியிடவில்லை என்று தெரிவித்தார். மேலும் இடதுசாரி ஜனநாயக முன்னணியை எதிர்த்து போட்டியிடுவதால் காங்கிரஸ் கட்சிக்கு கடும் போட்டியாக இருப்போம் என்றும் தெரிவித்துள்ளார்.