×

40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி அமோக வெற்றி பெறும் சர்வாதிகார ஆட்சி நடத்தும் மோடியை வீட்டுக்கு அனுப்ப வேண்டும்: சென்னை சோழிங்கநல்லூர் பிரசார பொதுக்கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேச்சு

சென்னை: சர்வாதிகார ஆட்சி நடத்தும் மோடியை வீட்டுக்கு அனுப்ப வேண்டும். தமிழகம், புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி அமோக வெற்றி பெறும்  என்று மு.க.ஸ்டாலின் கூறினார். திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில் தென்சென்னை தொகு திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கப்பாண்டியனை ஆதரித்து பிரமாண்ட பொதுக்கூட்டம் சென்னை சோழிங்கநல்லூர் கண்ணகி நகரில்  நேற்றிரவு நடந்தது. இதில் திமுக தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் பேசியதாவது: மத்தியில் நடைபெறும் ஆட்சி மாற்றத்திற்கான தேர்தல் இது. சர்வாதிகாரியாக ஆட்சி நடத்தி கொண்டிருக்கும் மோடியை வீட்டிற்கு அனுப்பக்கூடிய தேர்தல் இது. இந்த நாடாளுமன்ற தேர்தலில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி  சார்பில் திமுகவின் அங்கீகாரம் பெற்றிருக்கக்கூடிய வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியனை பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க ேவண்டும். புதுவை உள்ளிட்ட 40 நாடாளுமன்ற தொகுதிகளில், அதே  போல் தமிழகத்தில் நடைபெறக்கூடிய 18 சட்டப்பேரவை இடைத்தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை, நூற்றுக்கு நூறு சதவீதம் வெற்றியை பெற போகிறோம் என்பது தெளிவாக தெரிந்து கொண்டிருக்கிறது. அதற்கு எடுத்துக்காட்டாக,  ஒரு சாட்சியமாக இந்த கூட்டம் அமைந்திருக்கிறது.
இதே மாநகரத்தின் மேயராக ஒரு முறை அல்ல, இரண்டு முறை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியாற்றிருக்கக்கூடிய வாய்ப்பை பெற்றிருக்கிறேன். நான் மேயராக இருந்தபோது சென்னையில் கட்டிய 9 மேம்பாலங்களில்  முறைகேடு நடந்திருக்கிறது. ஸ்ட்ராங்கா இல்லை என்று சொல்லி ஒவ்வொரு பாலத்தையும் உளியை வைத்து தட்டித்தட்டி பார்த்தனர். விசாரணை கமிஷன் போடப்

போகிறோம் என்று மாலையில் வழக்கு போடுகிறார்கள். மாலையில் வழக்கு போட்டு இரவு 12 மணிக்கு தலைவர் வீட்டிற்கு வந்து விட்டனர். அவரை கைது செய்ய வந்து விட்டனர். இது மிகப்பெரிய கொடுமையான சம்பவம்.  நானும் அப்போது கைது செய்யப்பட்டேன். ஜெயலலிதா முதல்வர். போயஸ்கார்டனில் இருந்து ராதாகிருஷ்ணன் சாலை வழியாக தான் கோட்டைக்கு செல்வார். ராதாகிருஷ்ணன் சாலையில் கட்டியது நாம் கட்டிய பாலம். அது  பெரிய பாலம். அந்த பாலம் வழியாக தான் போவார். பாலம் சரியில்லை. பாலம் பழுது என்றால் முதல்வரை பாலத்தில் ஏற்ற விடுவார்களா. அதுவும் வெயிட்டான முதல்வர். நான் வெயிட் என்று சொல்வது பதவியை.  மாநகராட்சி பள்ளிக்கூடங்கள், சமுதாய கூடங்கள், பூங்காக்கள், விளையாட்டு திடல்கள், சாலைகள், சோடியம் விளக்குகள் அத்தனை பணிகளை செய்தோமே. தனியார் பள்ளிகளோடு போட்டி போடுகிற அளவுக்கு மாநகராட்சி  பள்ளிகளை உயர்த்தி காட்டிய அந்த மேயர் உங்களிடம் ஓட்டு கேட்டு வந்திருக்கிறேன். தென்சென்னை பகுதியை பொறுத்தவரை பல சாதனைகளை, திட்டங்களை, அது தொழில் துறையாக இருந்தாலும் சரி, சாலை வசதியாக  இருந்தாலும் சரி, தகவல் தொழில்நுட்பமாக இருந்தாலும் சரி எவ்வளவு பணிகளை நிறைவேற்றி தந்திருக்கிறோம்.  தமிழகத்தின் பின் தங்கிய மாவட்டங்களில் சிறப்பாக இயங்க கூடிய சிப்காட்டை பார்க்க முடிக்கிறது என்றால் அதற்கு காரணம் தலைவர் கலைஞர். 1971ல் தமிழக அரசு அதில் முழுமையாக ஈடுபட்டு சிப்காட்டை தொடங்கியது.  அதன் மூலமாக தமிழகத்தின் பல இடங்களில் தொழில் வளாகம் உருவாக்கப்பட்டது. அதன் மூலம் பின் தங்கிய மாவட்டங்களில் 44 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைத்தது. ஒற்றை சாளர முறையில் கொண்டு வந்து,  உடனடியாக தொழில் தொடங்கும் வசதியை நமது ஆட்சியில் ஏற்படுத்தி கொடுத்தோம்.

உலகம் முழுவதும் உள்ள தமிழ் மக்கள் பயன் பெறக் கூடிய வகையில் உலக தமிழ் இணைய பல்கலைக்கழகத்தை உருவாக்கியவர் தலைவர் கலைஞர்.  மாநிலம் முழுவதும் உள்ள 1200 பள்ளிகளில் ₹187.66 கோடி செலவில்  கணினி அறிவியல் பாடத்தை விருப்ப பாடமாக படிக்க கூடிய நிலையை உருவாக்கி தந்து பலருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் நிலையை உருவாக்கி தந்தவர் கலைஞர். இந்தியாவில்  பள்ளி மற்றும் கல்லூரிகளில் முதன்  முதலாக கணினி கல்வியை அறிமுகப்படுத்திய மாநிலம் தமிழ்நாடுதான். அதை செய்தவர் கலைஞர்தான். ஆனால் இன்றைக்கு இருக்க கூடிய மோடி. அது மோடியாக இருந்தாலும் சரி. எடப்பாடியாக இருந்தாலும் சரி. இவர்களுக்கு சாதனைகள் மற்றும் சரித்தரத்தை சொல்லக் கூடிய வாய்ப்பு இருக்கிறதா. வேதனைகளை தான்  வரலாறுகளாக நாம் சொல்ல முடியும். ஆண்டுக்கு  2 கோடி இளைஞர்களுக்கு வேலை வழங்கப்படும் என்று கூறினார். யாருக்காவது வேலை கிடைத்து இருக்கிறதா?  அரசியல் அமைப்பு அங்கீகரித்துள்ள அமைப்புகளான சிபிஐ,  ரிசர்வ் வங்கி, திட்ட கமிஷன், உச்சநீதிமன்றம், தேர்தல் ஆணையம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளில் மோடி தலையிட்டு தனது அரசியல் லாபத்திற்காக அதை பயன்படுத்துகிறார். ராணுவத்தை விட்டு வைப்பார்கள் என்று  நினைத்தோம். அதையும் விட்டு வைக்கவில்லை. ராணுவ வீரர்களின் தியாகத்தை தேர்தலுக்கு பயன்படுத்துகிறார். இது நியாயமா?  தானே அரசு என்று செயல்படுவது சர்வாதிகாரம். தான் மட்டுமே அரசு என்று செயல்படுவது  எதேச்சாதிகாரம். இந்த இரண்டாகவும் செயல்படுகிறார் மோடி. மோடி சர்வாதிகாரி, எடப்பாடி உதவாக்கரை. பொள்ளாச்சி அவமானம் போதாதா. துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் மகன் இதில் ஈடுபட்டு இருக்கிறார்.  பெண்களை கட்டாயப்படுத்தி பாலியல் தொல்லை கொடுத்து, அதை வீடியோ படம் எடுத்து, அதை அவர்களுக்கு அனுப்பி மிரட்டி பணம் பறித்து இப்படிப்பட்ட கொடுமையை செய்த காரணத்தால் ஒரு இளம் பெண்ணின் சகோதரர்  துணிச்சலாக புகார் கொடுத்த பிறகு அவர் மிரட்டப்பட்டு இருக்கிறார். மிரட்டியவர் பொள்ளாச்சி ஜெயராமனின் ெநருங்கிய நண்பர். இவர் அதிமுக கட்சியில் இருக்கிறார். முதல்வர் எடப்பாடி பழனிசாமி வாய் திறந்து இது பற்றி  பேசி இருக்கிறாரா. இந்த சம்பவத்திற்கு பொள்ளாச்சி ஜெயராமன் மட்டுமல்லாமல் முதல்வர் எடப்பாடியும் பதவி விலக வேண்டும்.

 முதல்வர் பிறந்த சேலம் மாவட்டம் அவர் வீட்டின் அருகே கொண்டலாம்பட்டி பைபாஸ் சாலையில் இரவு நேரத்தில் பெண்களை வழிமறித்து கூட்டு வன்புணர்ச்சி செய்து பாலியல் ெதாந்தரவு செய்து நகை, பணத்ைத பறித்த  சம்பவம் செய்தியாக வந்தது. இதுதான் உங்களுக்கு விருதா. கொடநாடு கொலை பிரச்சனை பற்றி மு.க.ஸ்டாலின் பேசக்கூடாது என்று நீதிமன்றத்திற்கு போனார்கள். இன்றைக்கு நீதிமன்றம் என்ன தீர்ப்பு தந்திருக்கிறது. ஏன் பேசக்கூடாது, நடந்தது உண்மையா இல்லையா, பேசட்டும் என்று நீதிமன்றம் ெசால்லியாச்சு. இனிமேல் ஒருபடி மேலே போய்  பேசுவேன். ஜெயலலிதா இறந்தார் என்று செய்தி கேட்டவுடன் நம்முடைய ஆதாரங்களை மீட்க வேண்டும் என்று ஜெயலலிதாவுக்கு டிரைவாக இருந்த கனகராஜ் என்பவரை பயன்படுத்தினார்கள். கேரளாவில் இருந்து 11 பேர்  கூலிப்படையின் மூலம் வீட்டிற்குள் நுழைய முயற்சி செய்தார்கள். அங்கிருந்த காவலாளி கொல்லப்படுகிறார். அந்த ெகாலையை மறைக்க மேலும் 4 கொலைகள் நடந்தது. சயான் வீடியோ மூலம் எடப்பாடி சொல்லிதான்  கனகராஜ் என்னிடம் உத்தரவு போட்டார். கொடநாட்டில் ₹2 ஆயிரம் கோடி இருக்கு அதை கொண்டு வந்து கொடுத்தால் ₹5 கோடி கமிஷன் கொடுக்கிறேன் என்று எடப்பாடி சொல்லியிருக்கிறார் என்றார். இது பத்திரிக்கையில்  வெளிவந்துள்ளது எதிர்க்கட்சி தலைவர் என்ற முறையில் மக்களிடம் இதை சொல்லிக்கொண்டு இருக்கிறேன். இதை தடுப்பதற்கு நீதிமன்றம் சென்றீர்கள்.

 அதிமுக தேர்தல் அறிக்கையில் நீட் தேர்வை ரத்து செய்வோம் என்று கூறியிருக்கிறார்கள். 5 வருடம் அமைதியாக இருந்து விட்டு தேர்தல் வருகிற காரணத்தால், தேர்தல் அறிக்கையில் நீட் தேர்வுக்கு விலக்கு என்று  சேர்த்திருக்கிறார்களே.. இது யாரை ஏமாற்ற?
விரைவில் தமிழ்நாட்டிலே ஆட்சி மாற்றத்தை உருவாக்கி அந்த நல்ல செய்தியை உங்களிடத்தில் வந்து கொடுப்போம் என்று கலைஞரிடம் சொன்னோம். நிறைவேறவில்லை. இயற்கை அவரை நம்மிடம் இருந்து பிரித்து விட்டது.  இயற்கை பிரித்து இருந்தாலும், இப்போது நிறைவேறுகிற சூழ்நிலை வந்திருக்கிறது. அந்த வெற்றிக்கனியை பறிக்க போகிறோம். பறிக்கிற அந்த வெற்றிக்கனியை அண்ணாவின் பக்கத்தில் ஓய்வு எடுத்து கொண்டிருக்கிற  தலைவரின் நினைவிடத்தில் கொண்டு போய் வைத்து அவரின் வாழ்த்துக்களை பெறப் போகிறோம். அது உறுதி. நாடும் நமதே, நாற்பதும் நமதே.இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.பொதுக்கூட்டத்தில் சென்னை தெற்கு மாவட்ட திமுக செயலாளர் மா.சுப்பிரமணியன், மாவட்ட செயலாளர் ஜெ.அன்பழகன், டி.கே.எஸ்.இளங்கோவன் எம்பி, பகுதி செயலாளர் அரவிந்த் ரமேஷ் எம்எல்ஏ, தலைமை செயற்குழு  உறுப்பினர் தனசேகரன், மகேஷ்குமார், காங்கிரஸ் மாவட்ட தலைவர்கள் கராத்தே தியாகராஜன், ரூபி மனோகரன், மதிமுக துணை பொது செயலாளர் மல்லை சத்யா உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : alliance ,DMK ,constituencies ,speech ,campaign ,MK Stalin ,Chennai Cholinganallur , The DMK, 40 constituencies, dictatorial , MK Stalin's
× RELATED தேர்தல் பணிகள் குறித்து திமுக கூட்டணி கட்சிகள் ஆலோசனை கூட்டம்